பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்ட குஷ்பு.. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவிலிருந்து நீக்கம்
சென்னை: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படைய உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். திமுகவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டது.
அது போல் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பும் புகார் அளித்திருந்தது. இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார்.
அது போல் திமுக பொதுக் கூட்ட மேடைகளிலும் அவர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மன்னித்து கட்சியில் இணைத்துக் கொண்டு கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறும் கட்சித் தலைமைக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து 5 மாதங்கள் கழித்து கடும் எச்சரிக்கையுடன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த மே மாதம் 17 ஆம் தேதி திமுகவில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் கட்சியில் மீண்டும் சேர்ந்த ஒரு மாதம் ஆன நிலையில் அண்மையில் ஒரு பொதுக கூட்டத்தில் பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமாக இருந்த குஷ்பு குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளில் பேசிய வீடியோ வைரலானது.

இந்த நிலையில் இன்று குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். அவர் பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கருணாநிதி இருந்த போது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்கள் ஒரு பெண்ணை இழிவாக பேசும் போது அவர்களை அந்த பெண்ணை ஒரு மகளாகவோ மருமகளாகவோ தாயாகவோ பார்ப்பதில்லை. நான் எனக்காக பேசவில்லை, என் மகள்களுக்காகவும் மற்ற பெண்களுக்காகவும் பேசுகிறேன். பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக் கூடாது. இது போன்ற ஆட்களைத்தான் திமுகவில் தீனி போட்டு வளர்க்கிறார்கள். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய மொழியிலேயே என்னால் பேச முடியும். ஆனால் நான் அப்படி செய்தால் என் வளர்ப்பு தவறாகிவிடும். என்னை சீண்டி பார்க்காதீர்கள், தாங்க மாட்டீர்கள் என கோபமாக கொந்தளித்த குஷ்பு ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டார்.
குஷ்பு மீது அவதூறு பேசிய நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். ஏற்கெனவே நயன்தாரா குறித்து அசிங்கமாக பேசிய ராதாரவி நீக்கப்பட்ட நிலையில் தற்போது குஷ்பு குறித்து அவதூறு பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும் நீக்கப்பட்டுள்ளார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு குஷ்பு நன்றி கூறியுள்ளார்.
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications