ஸ்டாலின் கொடுத்த டார்கெட்! விழிபிதுங்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள்! வலைவீசும் லோக்கல் நிர்வாகிகள்!
சென்னை: ஸ்டாலின் கொடுத்துள்ள டார்கெட்டை எவ்வாறு தொடுவது எனத் தெரியாமல் திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் திணற ஆரம்பித்துள்ளனர்.
2 மாதத்தில் 1 கோடி புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார்.
இதனிடையே இந்த கால அவகாசம் போதாது என்பது திமுக மாவட்டச் செயலாளர்களின் எண்ணவோட்டமாக உள்ளது..

திமுக மாவட்டச் செயலாளர்கள்
கடந்த 22ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற மாபெரும் முன்னெடுப்பை ஏப்ரல் 3ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏப்ரல் 3ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023க்குள் அதாவது இரண்டே மாதத்தில் திமுகவில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு மாவட்டச் செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

புதிய உறுப்பினர்கள்
அதன்படி பார்த்தால் சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு 40,000 பேர் முதல் 45,000 பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டிய கட்டாயம் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தினமும் 700 பேர் முதல் 750 பேர் வரை உறுப்பினர்களாக சேர்த்தால் தான் ஸ்டாலின் கொடுத்துள்ள 2 மாத கால கெடுவுக்குள் இந்த மிஷனை கம்ப்ளீட் செய்ய முடியும். இதனால் இந்த விவகாரத்தை மலைப்புடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள் பலரும்.

எளிதான காரியமல்ல
இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சியில் இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் உறுப்பினர்களாக இணைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும் ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதால் இப்போதே புதிய உறுப்பினர்கள் சேர்க்கைகான பணிகளை தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தை இன்றும் நாளையும் நடத்தி இந்த அசைன்மெண்டை எப்படி முடிப்பது என ஆலோசிக்கவுள்ளனர்.

ஏப்ரல் 3ஆம் தேதி
ஏப்ரல் 3ஆம் தேதி தான் "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்பு தொடங்கப்பட்டாலும் இப்போதே லோக்கல் நிர்வாகிகள் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வேலையை மெல்ல தொடங்கிவிட்டனர். எப்படியும் டார்கெட்டை முடித்தாக வேண்டும், அதற்கு எதற்கு இன்னும் 10 நாட்களை வீண் செய்ய வேண்டும் என்பதே இதற்கு காரணமாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications