திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாநில மாநாடு! திமுக மா.செ கூட்டத்தில் முக்கிய முடிவுகள்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். இதில் 4 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, வாக்குச்சாவடிக்கு 10 பெண்கள் வீதம் வெல்லும் தமிழ் பெண்கள் வீடு வீடாக சென்று பரப்புரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோன்று மார்ச் 8 ஆம் தேதி திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மாலையில் தொடங்கி நடைபெற்றது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெறும் ஆலோசனையில், திமுக எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார். தேர்தலுக்கு நாட்கள் இன்னும் குறைவாகவே இருப்பதால் அனைவரும் தேர்தல் பணிகளை வேகமாக செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்த கூட்டத்தில் முக்கியமாக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மார்ச் மாதம் 8 ஆம் தேதி 10 லட்சம் பேர் பங்கேற்கு வகையில் பிரமாண்ட மாநாட்டினை திருச்சியில் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும் என்ற பெயரில் திருச்சியில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோன்று வாக்குச்சாவடிக்கு 10 பெண்கள் வீதம் வெல்லும் தமிழ் பெண்கள் வீடு வீடாக சென்று பரப்புரை செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் மார்ச் 8 வரை மகளிர் அணியினர் வீடு வீடாக அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொகுதிக்கு 4 இடங்களில் தமிழ்நாடு தலைகுனியாது தலைப்பில் நட்சத்திர பரப்புரையாளர்கள் கூட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே இருப்பதால் தேர்தல் வியூகம், கூட்டணி, தொகுதிகள் நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications