இன்று திரளும் திமுக மாவட்டச் செயலாளர்கள்.. முக்கிய ஆலோசனையை வழங்கவுள்ள ஸ்டாலின்.. என்ன மேட்டர்?
சென்னை: சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் குறித்தும், தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கின்றன. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால் திமுக தரப்பில் முதலில் கட்சியினரிடம் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறது. உடன்பிறப்பே வா என்ற பிரச்சாரம் மூலமாகத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு மூலமாகப் புதிய உறுப்பினர்களை திமுக சேர்த்து வருகிறது. ஒவ்வொரு பூத்திலும் 30 சதவிகித உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், பின்னர் அதனை 40 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்தார். இந்த ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதனை நீட்டிக்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
அதேபோல் மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஓரணியில் தமிழ்நாடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த முடிவு திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் திமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் பிரச்சனையை சரி செய்யவும் திமுக தலைமை முயன்று வருகிறது. அதற்கேற்ப மாவட்டச் செயலாளர்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக நிர்வாகிகள் இடையிலான பிரச்சனைகளை சரி செய்த பின், விரைவில் திமுக தரப்பில் தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications