பொங்கல் முடிந்தது.. இனி ஓய்வின்றி தேர்தல் பணி செய்ய வேண்டும்.. திமுக மா.செ கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்ற 4 முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அரசு ரீதியாக பல்வேறு திட்டங்களை அறிவிப்பது, கட்சி ரீதியாகவும் கூட்டங்களை நடத்துவது என்று உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இன்று மாலை மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பரபர வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கியுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஆட்சியை பிடிக்க அதிமுகவும், ஆட்சியை தக்க வைக்க திமுகவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். திமுக சார்பில் மண்டலம் வாரியாக இளைஞரணி மற்றும் மகளிரணி மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே வடக்கு மண்டலத்தில் இளைஞரணி மாநாடு, மேற்கு மண்டலத்தில் மகளிரணி மாநாடு நடத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி மாநாடு நடத்தவுள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே உள்ள நிலையில், இன்று மாலை (20.1.26) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
தேர்தல் குறித்து ஆலோசனை
அதன்படி முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. . இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. களப்பணிகள், பூத் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் முதல்வர் ஸ்டாலினும் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே இருப்பதால் அனைவரும் தீவிரமாக தேர்தல் பணி செய்ய வேண்டும் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருச்சியில் மார்ச் 8 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொங்கல் முடிந்துவிட்டது. இனி ஓய்வின்றி தேர்தல் பணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், அனைத்து பரப்புரைகளையும் மைக்ரோ லெவலில் கண்காணிப்பேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். இதேபோன்று அமைச்சர், மாவட்ட செயலாளர் , எம்.பி, எம்.எல்.ஏ என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications