ஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்!
சென்னை: ஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டசடை தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதேபோல் 38 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களை திமுக கைப்பற்றியது. திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
வரும் ஜூன் 3ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில்
ஜூன் 3ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள், எம்,பி-க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமை கழகத்தில் இருந்து பேராசிரியர் அன்பழகன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமனற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் வருகிற ஜூன் 3ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி என்பதால் அன்றைய நாள் கட்சியின் திட்டம், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து முடிவு செய்யப்படலாம் என தெரிகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications