வடசென்னை, கள்ளக்குறிச்சி.. திமுக- தேமுதிக நேரடி மோதல்.. தேமுதிக நிச்சயம் அவுட்?
Recommended Video

சென்னை: வடசென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் திமுக- தேமுதிக நேரடியாக களம் காண்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டது. அதில் அக்கட்சியானது கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

4 தொகுதிகள்
இந்த நிலையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் இரு தொகுதிகளான கள்ளக்குறிச்சி, வடசென்னையில் திமுக நேரடியாக களத்தில் உள்ளது.

மக்களவை தேர்தல்
என்னதான் கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவையே மூன்றாம் இடத்துக்கு தள்ளிய கட்சி தேமுதிக என்றாலும் கூட அந்த புகழ் எல்லாம் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலோடு போய்விட்டது.

தேமுதிக
அதிமுக, பாஜகவை விமர்சனம் செய்து விட்டு மீண்டும் அக்கட்சியில் கூட்டணியில் இணைந்த தேமுதிகவின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தேமுதிகவினரே சிலர் அதிருப்தியில் உள்ளனர்.

வாய்ப்பில்லை
கள்ளக்குறிச்சியில் தேமுதிகவுக்கு செல்வாக்கே இல்லை. பாமகவுக்குத்தான் செல்வாக்கு உள்ளதாம். எனவே இந்த இரு தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு நிச்சயம் வெற்றி வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications