திமுகவில் ஒருவர் 2 முறைதான் மாவட்ட செயலாளராக பதவி வகிக்க முடியும் என்ற தீர்மானம் உடனே திருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் ஒருவர் மாவட்டச் செயலாளர் பதவியை 2 முறை வகிக்கலாம் என்று செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இனி ஒருவர் மாவட்டச் செயலாளர் பதவியை 3 முறை வகிக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

திமுகவில் அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் செய்யப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 78ல் இருந்து 110ஆக உயர்த்தப்பட உள்ளது. அதேபோல் மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பாக 70 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DMK

அதேபோல் திமுகவில் இனி ஒருவர் மாவட்டச் செயலாளர்கள் பதவியை 2 முறை மட்டுமே வகிக்க முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக செயற்குழு கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை தொடர்ந்து ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதன்பின் திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக நம் பேரியக்கத்தின் இரத்தநாளங்களாக விளங்குபவை மாவட்டக் கழகங்கள். தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை இதுவரை 77 ஆக வைத்துள்ளோம். வருவாய் மாவட்டங்களை அடிப்படை அலகாகக் கொண்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறு பிரித்த பிறகு, ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டும் எஞ்சும் நிலை ஏற்பட்டால், அந்தத் தொகுதி அதே வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்பட வேண்டும். கழகத்தின் நிர்வாகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்த மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது.

அதேபோல், மாவட்டக் கழகச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். இதனடிப்படையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள், 110-ஆக அதிகம் ஆகும். மாவட்டக் கழகங்கள் அதிகரிக்கின்ற காரணத்தால் மாநகரச் செயலாளர்கள் எனும் பொறுப்பின் தேவை எழவில்லை என்பதை இக்கூட்டம் கருத்தில் கொள்கிறது.

அமையவுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் இடம்பெறவுள்ள தொகுதிகளைக் கழகத் தலைவர் முடிவெடுத்து அறிவிக்க இந்தத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சீனியர்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி, அந்த இடத்திற்கு இளைஞர்களை கொண்டு வர முடியும் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+