இந்தியும், ஆங்கிலமும் தான் இருமொழி கொள்கையா.. தமிழக காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? திமுக கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியில் அது "இந்தியும் ஆங்கிலமும்" என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. காவல் துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன் என்றும் திமுக சாடியுள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது "இந்தியும் ஆங்கிலமும்" என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா? காவல் துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?

DMK

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா? அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா?

தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை. குறிப்பு: பல ஆண்டுகளாக மத்திய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது! என்றும் சாடியுள்ளது.

ஏற்கனவே மாநில அரசு சார்பாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் பெயர்ப் பலகைகளில் இந்தியும் இடம்பெற்றிருந்தது. தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதன்பின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்திருந்தார்.

தற்போது கொடி நாள் அன்று காவல்துறையினர் அணியும் சீருடையில் இந்தியும், ஆங்கிலமும் இடம்பெற்றுள்ள பேட்ஜை மட்டுமே அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்பதே தவெகவின் கொள்கை என்று விஜய் அறிவித்திருந்தார். ஆனால் தொடர்ச்சியாக இருமொழிக் கொள்கைக்கு சவால் விடுக்கும் வகையில் செயல்பாடுகள் எழுவது விமர்சனங்களை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+