விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1 % கூட.. மாணவர்கள் நலனுக்காக திமுக செலவிடவில்லை - அண்ணாமலை அதிருப்தி
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள் முறையான பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1 % கூட மாணவர்கள் நலனுக்காக திமுக அரசு செலவிடவில்லை என்று அண்ணாமலை அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தப் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என்று தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மாணவர் விடுதிகளில், தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என, மாணவர்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும், இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்திருந்தது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், ஒரு மாணவருக்கு தினம் ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 உணவுப் படி வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு ரூ. 50 உணவுப் படி என்பதே மிகக் குறைவாக இருக்கையில், தி.மு.க. அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும், ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. கடந்த ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, ஐந்து மாணவிகள் காயமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் இத்தனை அவலநிலையில் இருக்க, தனது விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1 சதவீதம்கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை தி.மு.க. அரசு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 - 2024 விளம்பரச் செலவு, ரூ. 1.65 கோடி. 2024 - 25 ஆண்டு விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. இந்த பெயர் மாற்ற விளம்பரத்துக்கு இன்னும் சில கோடிகள் கணக்கு காட்டலாமே தவிர, இதனால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications