வேலையை காட்டிய திமுக.. கொதிக்கும் பாஜக தலைகள்.. அண்ணாமலை போட்டோ மட்டும் மிஸ்சிங் பார்த்தீங்களா?
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நாணயம் வெளியீட்டு நிகழ்வில் நடந்த பல சம்பவங்கள், "திமுக-பாஜக கூட்டணி உருவாகிறது. பாஜகவுடன் மறைமுகமாக திமுக நெருங்கி விட்டது. அது கூட்டணியாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு" என்று தமிழக அரசியலில் உணர்த்தின.
உணர்த்திக் கொண்டும் இருக்கின்றன. திமுக கூட்டணி கட்சிகள் கூட, திமுக தலைமையை சந்தேகக் கண் கொண்டே பார்க்கத்துவங்கியுள்ளன. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பேசுபோது, திமுக-பாஜக நெருக்கம் குறித்தே அதிகம் பேசிக் கொள்கிறார்கள்.

கேள்வி மேல் கேள்வி: தமிழ்நாட்டில் கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டது, இதில் திமுக பாஜகவினர் நெருக்கமாக இருந்தது உள்ளிட்ட பல விஷயங்கள் கவனம் பெற்றுள்ளது. இந்த நெருக்கத்திற்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாஜக தலைவர் அண்ணா மலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். பாஜக - திமுக நிர்வாகிகள் நெருக்கமாக காணப்பட்டனர். ஆளுநரின் தேநீர் விருந்தை ஸ்டாலின் புறக்கணித்தால், கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு ராஜ்நாத் சிங் வரமாட்டார் என்றும், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் புறக்கணிப்பார்கள் என்றும், புறக்கணிப்பை அண்ணாமலை வெளிப்படையாகச் சொல்வார் என்றும் செய்திகள் வந்தன.. இதனால் தேவையற்ற பிரச்சனை வேண்டாம் . இந்த விவகாரத்தில் சுமுகமாக செல்லலாம் என்று முடிவு எடுத்து இணக்கமாக திமுக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணி: பாஜக இப்படி திமுகவுடன் நெருக்கமாக இருக்க வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் தயவை பாஜக நாடுகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் திமுகவின் ஆதரவை பெற பாஜக இப்படி செய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சந்தேகங்கள் காட்டுத்தீ போல பரவி வருவது, திமுகவிற்கு எதிராகச் செல்வதாக முதல்வரின் கவனத்துக்கு உளவுத்துறையும் தகவல் அனுப்பியது.
இந்த நிலையில் தான், திமுக தலைமையிடமிருந்து, கலைஞர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் அஞ்சலி செலுத்தும் போது அண்ணாமலை இருக்கும் ஃபோட்டோவை தவிர்க்க வேண்டும் ; அண்ணாமலை படம் இடம்பெறக்கூடாது என்று முரசொலி நிர்வாகத்துக்கு சொல்லப்பட்டது. தலைமையின் உத்தரவின்படி, அண்ணாமலை உருவத்தை கட் பண்ணிட்டு, ராஜ்நாத்சிங்-ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இருக்கும் படத்தை பயன்படுத்தினர்.

அதாவது, அண்ணாமலைக்கு ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் கொடுத்த முக்கியத்துவம் தானே திமுக-பாஜக கூட்டணி மலர்கிறது என்பதாக செய்தியை பரப்பியது ! அதனால், பாஜகவுடன் திமுகவுக்கு தொடர்பில்லை என காட்டுவதற்காகவே முரசொலியில் அண்ணாமலை ஃபோட்டோ தவிர்க்கப்பட்டது என்கிறார்கள்.
திமுகவின் அதிகாரப் பூர்வ பத்திரிகையில் அண்ணாமலை படத்தை போடாமல் தவிர்க்கப்பட்டது ஒரு புறம் இருக்க, திமுக தலைவர் ஸ்டாலின், "திமுகவுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை. தனது கொள்கையிலிருந்து திமுக எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை" என்று விளக்கம் அளித்தார். முதல்வரின் விளக்கம், அண்ணாமலை படம் முரசொலியில் கட் என இருந்தாலும், திமுக-பாஜக நெருக்கம் குறித்த சந்தேகம் மட்டும் தமிழக அரசியலிருந்து விலகவில்லை என்பது மட்டும் ஆழமாகப் பதிந்துள்ளது.












Click it and Unblock the Notifications