யார் இந்த "டாக்டர் எழிலன்".. ஜெயிச்சா அமைச்சர்தான்.. "சூப்பர் ஹீரோ"வின் மகன்.. திமுகவின் அதிரடி..!
டாக்டர் எழிலன் ஆரியம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்
சென்னை: திமுகவின் "சூப்பர் ஹீரோ" என்று புகழப்படும் தேர்தல் அறிக்கைகளின் தளகர்த்தராக திகழ்ந்த பேராசிரியர் மு. நாகநாதனின் மகன்தான் திமுகவின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் எழிலன் ஆவார்.
Recommended Video

பேராசிரியர் மு.. நாகநாதன், மறைந்த கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்... அதிகம் அறியப்படாதவர் ஆனாலும் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர்..
தன்னை வெளிச்சத்தில் ஒருபோதும் காட்டிக் கொள்ள விரும்பாதவர், மிகுந்த அடக்கமானவர். அவர்தான் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிய அதிரடி தேர்தல் அறிக்கையை திமுகவுக்காக தயாரித்து கொடுத்து அசரடித்தவர்.

திமுக
இலவச டிவி .. இதுதான் இன்று வரை திமுகவை தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே புரட்டிப் போட்ட பல கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழும் பல்வேறு இலவச அறிவிப்புகளை தனது தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைத்து திமுகவுக்கு உயர்வு கொடுத்தவர்தான் நாகநாதன். அவரது மகன்தான் டாக்டர் எழிலன்.

ஆயிரம் விளக்கு
சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் எழிலன். கருணாநிதியின் கடைசிக்காலத்தில் அவருடனேயே இருந்தவர். காவிரி மருத்துவமனையில் பொது மருத்துவராக இருக்கும் எழிலன், நீட் விவகாரத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டவர். இவருக்குத்தான் ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் கொடுத்துள்ளது திமுக.

டாக்டர் எழிலன்
திமுகவுக்காக மட்டுமல்லாமல் சமுதாய பிரச்சினைகளுக்காகவும் தீவிரமாக குரல் கொடுத்து வருபவர் எழிலன். அவருக்கு சரியான நேரத்தில் சீட் கொடுத்துக் கெளரவித்துள்ளது திமுக... இத்தனைக்கும் நாகநாதன் திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர் கிடையாது. ஆனால் தீவிர திராவிட சிந்தனையாளர் ஆவார்.. அதன் விளைவாகத்தான் பல்வேறு இலசவ அறிவிப்புகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் அவர் இடம் பெறச் செய்தார்.

அமைப்பு
அவையெல்லாம் சமுதாயத்தில் பெரும் புரட்சிகளையே ஏற்படுத்தியவை என்பதை மறந்து விட முடியாது. டாக்டர் எழிலன், "இளைஞர் இயக்கம்" என்ற அமைப்பையும் நிறுவி நடத்தி வருகிறார். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக உரத்துக் குரல் கொடுத்தவர். கூடங்குளம், நெடுவாசல் என அனைத்து சமூகப் பிரச்சினைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருபவர்... சேலம் எட்டு வழிச்சாலை போராட்டத்திலும் தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ளார்.
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்












Click it and Unblock the Notifications