திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!
சென்னை: திமுகவில் மிகவும் இளம் வேட்பாளராக 26 வயதான மருத்துவர் கோகிலாமணி அவினாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவினாசி தொகுதி அதிமுக தரப்பில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களமிறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மத்திய இணையமைச்சரை எதிர்த்து திமுகவில் மிகவும் இளம் வேட்பாளர் களமிறக்கப்படுவது விவாதமாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மொத்தமாக 164 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் நேரடியாகவும், 11 கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. அதேபோல் திமுக வேட்பாளர்களில் 18 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடினமான தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கரூரில் முடிசூடா மன்னனாக இருந்து வரும் செந்தில் பாலாஜி, இம்முறை கோவை தெற்கு தொகுதிக்கு மாறி இருக்கிறார். கடந்த முறை கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெல்லவில்லை. இதனால் இம்முறை கோவையில் 4 முதல் 6 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இதனிடையே திமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு வியப்பூட்டும் சம்பவம் அமைந்துள்ளது. அதாவது திமுக வேட்பாளர்கள் பட்டியலில் மிகவும் இளம் வேட்பாளர் என்ற பெருமை கோகிலா மணி என்ற பெண்ணிற்கு கிடைத்துள்ளது. 26 வயதான மருத்துவரான கோகிலா மணி திமுக சார்பாக அவினாசி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் அவினாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பாக இம்முறை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அவினாசி தொகுதியில் அதிமுக பலமாக இருந்து வரும் சூழலில், இளம் வேட்பாளரை திமுக களமிறக்கி இருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக கோகிலா மணி பேசுகையில், அவினாசி தொகுதியில் போட்டியிட என்னை தேர்வு செய்த முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications