"நீண்ட நாட்கள் முன்னர் இறந்த உடலில் தான் இப்படி இருக்கும்” - திமுகவை சேர்ந்த டாக்டர் சஃபி சந்தேகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவை சேர்ந்த கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபு நேற்று காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. விஎஸ் பாபு உடலில் ஏற்பட்டுள்ள நிறமாற்றம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் திமுகவை சேர்ந்த மருத்துவர் சஃபி.

சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக தலை​வரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றதன் மூலம் பிரபலம் ஆனவர் வி.எஸ்​.​பாபு. ஒரு மாத​மாக நடந்து வந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் பங்​கேற்ற அவருக்​கு, கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி இரவு மூச்​சுத்திணறல் ஏற்​பட்​டது.

DMK Dr Safi Raises Questions Over Discoloration on Late TVK MLA VS Babu s Body

சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வி.எஸ்.பாபு, 72 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

செப்டம்பர் 23 ஆம் தேதி முதல்​வர் விஜய் மருத்​து​வ​மனைக்கு சென்று வி.எஸ்​.​பாபுவை சந்​தித்து நலம் விசா​ரித்​தார். அதன் பிறகு பல நாட்களாகவே அவரது உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவில்லை. கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தனது அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்தது. இந்நிலையில் விஎஸ் பாபு உடல் புகைப்படத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

மருத்துவரும் திமுக செய்தி தொடர்பாளரும், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளருமான டாக்டர் சஃபி, விஎஸ் பாபு முகத்தில் தெரியும் மாற்றங்களைக் குறிப்பிட்டு சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மருத்துவர் சஃபி ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒண்ணு.. MGM hospital எதையோ பெருசா மறைக்குது.., இல்ல.. நம்ம "தவெக" கும்பல் எதையோ சிறப்பா மறைக்குது..

நீண்ட நாட்கள் முன்னர் இறந்த உடலில் தான் இந்த Blood settling (livor mortis) என்பது காணப்படும்.
மேலும் முகத்தில் Staining from old bruises, pallor, lip drying, or early tissue changes with purplish, gray, or darkened patches on the face.
இதெல்லாம் காணமுடியும்.

Fluid infusion செய்வதால் முகத்தில் இதுபோன்ற Facial fullness மற்றும் சிறிய துவாரங்கள் காணப்படலாம். இது வெறும் 2 வருட அரசியல் கட்சி. ஆட்சிக்கு வந்து வெறும் 6 மாதங்கள் தான் ஆகின்றன.

ஆனால், இதெல்லாம் இவ்வளவு தைரியமா செய்ய ஒரு பெரிய முன் அனுபவம் இருக்க வேண்டும்..
என்னமோ தெரியல.. இது வேறே ஏதோ ..!" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+