சீனியர் + சின்சியாயாரிட்டி = "முருகன் 80".. மிரண்டு பார்க்கும் அதிமுக.. குஷியில் அறிவாலயம்.. !
துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்
சென்னை: "இதெல்லாம் நியாயமா... காட்பாடியில் 10-வது முறையாக சீட் தந்திருக்காங்க.. இதுதான் துரைமுருகனுக்கு கடைசி தேர்தலாக இருக்கும்.. நிச்சயம் அவரை தோற்கடிப்போம்" என்று எதிர்ரப்புக் குரல்கள் திமுகவில் இருந்தே அதிர கிளம்பி வருகின்றன..! ஆனாலும் சாதனை படைத்து விட்டார் துரைமுருகன்.
திமுகவின் மிக மூத்த தலைவர் துரைமுருகன்.. சொந்த மாவட்டம் வேலூர்... இந்த மாவட்டத்தில் பெரிய அளவில் செல்வாக்கு பெற்றவர் துரைமுருகன்..
குறிப்பாக காட்பாடி தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.. அதனால், காட்பாடியை திமுகவின் கோட்டையாக மாற்றியதே துரைமுருகன்தான். கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கும் மேலாக எம்எல்ஏவாக இருக்கிறார். இப்போதைய அரசியல்வாதிகளில் அதிக முறை போட்டியிட்டது இவராகத்தான் இருக்கும்.

கொந்தளிப்பு
இப்போது திமுக தலைமையிடம் இவர் மறுபடியும் சீட் கேட்கவும் இளைஞர்கள் திமுகவில் கொந்தளித்துவிட்டனர். அடிமட்ட தொண்டர்கள் எல்லாம் இப்படியே கட்சிக்காக உழைத்து கொண்டே இருக்க வேண்டியதுதானா? பதவியை ஆண்டவர்களே மறுபடியும் மறுபடியும் போட்டியிட்டால் எப்படி? இந்த முறை துரைமுருகனுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்று ஸ்டாலினுக்கே லெட்டர் எழுதவும் செய்தனர்..

சீட்
அதுமட்டுமல்ல, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதால்தான், அவரது மகனுக்கு சீட் தந்து எம்பி ஆக்கிவிட்டார்.. துரைமுருகன் இப்போதைக்கு பொதுச்செயலாளர் பதவியை மட்டும் கவனித்து கொண்டு, அவரது இடத்துக்கு பதிலாக வேறு ஒருவருக்கு அந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தபடியே இருந்தன.

வயது
இன்னொரு பக்கம், காட்பாடியில் துரைமுருகனே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அவரது வயதை குறிப்பிடும் வகையில், 83 பேர், திமுகவில் விருப்ப மனு செய்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் துரைமுருகனுக்கு காட்டிபாடியில் போட்டியிட சீட் தரப்பட்டு உள்ளது.

கருணாநிதி
அதிக முறை போட்டியிடுகிறார் என்பதற்காக துரைமுருகனை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.. நல்ல அனுபவஸ்தர்.. முக்கிய முடிவுகளை கனகச்சிதமதாக எடுக்கக்கூடியவர்.. கட்சியை இப்போதுவரை வழிநடத்தி கொண்டிருப்பவர்.. கருணாநிதி இல்லாத இடத்தில் இப்போதைக்கு இவர்தான் மூத்த தலைவர்.. பேச்சு திறமையில் கெட்டிக்காரர்.. எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு கெட்ட பெயர் வராமல் பார்த்து கொள்பவர்.. என்பது ஒருசாராரின் கருத்தாக உள்ளது.

மக்கள்
ஆனால், வேறு சிலரோ, சொந்த தொகுதியில் இவருக்கு ஏகப்பட்ட அதிருப்தி இருக்கிறது.. பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம், இந்த முறையும் என்னை எப்படியாவது ஜெயிக்க வெச்சிடுங்க.. எனக்காக 2 நிமிஷம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டு கொண்டிருக்கிறார்.. தொகுதி மக்களை இந்த 2 மாசமாகத்தான் வந்து பார்க்கிறார்..

கிராம சபை
அதுவும், கிராம சபை கூட்டம், மக்கள் கிராம சபை கூட்டம் போன்றவைகளை கணக்கிட்டு வந்து பொதுமக்களை சந்திக்கிறார்.. பொது மக்களின் பிரச்சினைகளையும் சரியாக கவனிப்பதில்லை.. அதனால், இந்த தேர்தலில் கண்டிப்பாக துரைமுருகனை தோற்கடிப்போம்.. இது அவருக்கு கடைசி தேர்தலாக இருக்கும்... அடுத்த முறை புதிய ரத்தம் காட்பாடியில் பாயும் என்றும் கூறுகின்றனர். யார் எப்படி சொன்னாலும் துரைமுருகன் இன்னும் காட்பாடியில் கிங்காகவே வலம் வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை.












Click it and Unblock the Notifications