ஸ்டாலினை எழுப்பி பேசும் அளவுக்கு தேமுதிக ஒரு மேட்டரே இல்ல.. துரைமுருகன் தடாலடி.. அதிரடி
தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகளை அம்பலப்படுத்தும் விதமாக திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்து பேசிய வீடியோ பெரிய வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகளை அம்பலப்படுத்தும் விதமாக திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்து பேசிய வீடியோ பெரிய வைரல் ஆகியுள்ளது.
நேற்று தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. அதே நேரம் திமுகவுடனும் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேசி இருக்கிறார்.
சுதீஷ் நேற்று துரைமுருகனிடம் போன் செய்து பேசியுள்ளார். இதுகுறித்து துரைமுருகன் கொடுத்த பேட்டி பெரிய வைரலாகி இருக்கிறது.
|
சுதீஷ் பேசினார்
துரைமுருகன் தனது பேட்டியில், விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். என்ன சமாச்சாரம் என்று கேட்டேன். நாங்கள் அதிமுகவில் இருந்து விலகி உங்களுடன் வரட்டுமா என்று கேட்டார். கூட்டணி குறித்து பேசினார்.

ஊரில் இல்லை
எங்கள் தலைவர் ஊரில் இல்லை. அதேபோல் எங்களிடமும் கொடுக்க சீட்டும் இல்லை. எல்லோருக்கும் கொடுத்துவிட்டோம். நீங்கள் எங்களிடம் வருவதாக கூறினீர்கள். பின் அங்கு போனீர்கள். மாற்றி மாற்றி பேசினீர்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்.

போதிய சீட்
அதனால் எங்களிடம் போதிய சீட் இல்லை என்றேன். அதன்பின் தேமுதிக உறுப்பினர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். நான் எங்களிடம் சீட் இல்லை என்றேன். ஏன் அதிமுகவை விட்டு வருகிறீர்கள் என்று கேட்டேன். நான் தெளிவாக கூறிவிட்டேன். எங்களிடம் போதிய சீட் இல்லை. அவர்கள் போய்விட்டார்கள்.

முடியாது
எங்கள் கூட்டணி முடிவாகிவிட்டது. நாங்களே 20ல்தான் நிற்கிறோம். புதிதாக சீட் ஒதுக்க முடியாது. தலைவர் ஸ்டாலினிடம் பேசினேன். லைன் கிடைக்கவில்லை. அதன்பின் மீண்டும் இன்று போன் செய்தேன். அவர் தூங்குவதாக கூறினார்கள்.

முக்கியம் இல்லை
அவரை இதற்காக எழுப்ப வேண்டாம். ஸ்டாலினை எழுப்பும் அளவிற்கு தேமுதிக கூட்டணி முக்கியம் இல்லை என்று விட்டுவிட்டேன். தேமுதிக அழைப்பு விட்டாலும் சீட் எங்களிடம் இல்லை. தேமுதிக முயன்றால் பரிசீலிப்போம். ஆனால் எங்களிடம் சீட் இல்லையே.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications