ஆதிக்கவாதிகளும் வேண்டாம்.. அடிமைகளும் வேண்டாம்.. பாயிண்ட்டை பிடித்த திமுக.. டிவி சேனல்களில் ரிப்பீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, திமுக முக்கியமான கருப்பொருளாக, கையில் எடுத்துள்ள விஷயம் 'தமிழ் மானம் காப்போம்' என்பதாகும்.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஒரு பக்கம் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இன்னொரு பக்கம், தொலைக்காட்சி சேனல்களில் கட்சிகள் சார்பில், விளம்பரங்கள் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன.

விளம்பர வியூகம்

விளம்பர வியூகம்

அதில், திமுக முன்னணியில் உள்ளது. அக்கட்சியின் விளம்பரங்கள்தான் அடிக்கடி தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதில் திமுக முன்வைக்கும் முக்கியமான ஒரு கோஷம் ரீச் ஆக தொடங்கியுள்ளது. இந்த விளம்பரத்திற்கு பதிலடியாக அதிமுக, விளம்பரத்தை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக விளம்பரத்தின் வியூகம் உள்ளது.

அதிமுக, திமுக விளம்பரங்கள்

அதிமுக, திமுக விளம்பரங்கள்

கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா ஆகிய தமிழக அரசியலின் இருபெரும் ஜாம்பவான்கள் உயிரோடு இருந்த காலகட்டங்களிலும், டிவி விளம்பரங்கள் முக்கிய பங்கை பிடித்தன. இவ்விரு கட்சியுமே, பிறர் ஆட்சியில் இருந்தபோது, எந்த மாதிரி பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டனர் என மாற்றி, மாற்றி விளம்பரங்களாக வெளியிடுவார்கள்.

மக்கள் ஆர்வம்

மக்கள் ஆர்வம்

இவ்விரு கட்சிகளின் விளம்பரங்களையும் பார்க்கவே தனி ஆர்வம் மக்களிடம் இருந்ததுண்டு. உண்மையை சொல்பவர்கள் தெய்வதற்கு சமம். ஒவ்வொருத்தரும் எப்படி உண்மைகளை சொல்றாங்க பாருங்க என, இந்த விளம்பரங்களை பார்த்து மக்கள் சொல்லிக்கொண்டது உண்டு. கடந்த சட்டசபை தேர்தலின்போது, "போதும்மா" என்ற பிரச்சார கோஷத்தோடு திமுக வெளியிட்ட விளம்பரங்கள் வைரலாகின.

திமுக விமர்சனம்

இந்த நிலையில்தான், லோக்சபா தேர்தலில், ஒரு பிரச்சார வியூகத்தை திமுக முன்வைத்து விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. தமிழக விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை திமுக முன்வைத்துள்ளது. மோடி அரசிடம் அதிமுக அரசு தமிழக நலன்களை விட்டுக் கொடுத்துவிட்டது என்பது திமுகவின் நீண்டகால விமர்சனமாக உள்ளது. இதை லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் திமுக விளம்பரங்கள் எதிரொலிக்கின்றன.

ஆதிக்கவாதிகள்

ஆதிக்கவாதிகள்

தமிழனுக்கு தன்மானம் என்ற ஒன்று இருந்தது. அது டெல்லியிடம் அடகு வைச்சிட்டாங்க. ஓட்டு கேட்டு எங்ககிட்டதான் வருவீங்க என ஒருவர் பேசுவது போல வரும் விளம்பரத்தின் இறுதியில், கொடுக்கப்பட்டுள்ள வாசகம் என்ன தெரியுமா. ஆதிக்கவாதிகளும் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம்.. தமிழ் மானம் காப்போம். இப்படி சொல்கிறது அந்த விமர்சனம். இதில் ஆதிக்கவாதி என யாரை குறிப்பிடுகிறார்கள், அடிமைகள் என யாரை குறிப்பிடுகிறார்கள் என்பது விவரம் அறிந்தவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இது திமுக குடும்ப டிவி சேனல்கள் மட்டுமின்றி பிற சேனல்களிலும் ரிப்பீட் மோடில் ஓடிக் கொண்டுள்ளது. எனவே இதற்கு பதிலடியாக என்ன மாதிரி விளம்பரம் வரப்போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+