பெண்களுக்கு ஜாக்பாட்.. இளைஞர்களுக்கு அடிக்கும் லக்.. திமுகவின் தேர்தல் வாக்குறுதி.. ரெடியான செயலி
சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க பிரத்யேக செயலி நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க இந்த செயலி அமைக்கப்படுகிறது. அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்டாலின் எடுக்கும் சர்வே
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சர்வே ஒன்றை நிர்வாகிகள் மூலம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்று, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தினருடனும் பேச உள்ளது. பல முக்கியமான கேள்விகளை கேட்க உள்ளனர். பொங்கல் பரிசு வந்ததா, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவி தங்கள் வீட்டைச் சென்றடைந்ததா என விசாரித்து, ஒரு படிவத்தை வழங்கி விவரங்களை பெறுவார்கள்.
படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்படும். அதில் கோரிக்கையின் நிலையை அறிய முடியும். அவர்களுக்கு இருக்கும் கோரிக்கைகளை கேட்டு, அதன் அடிப்படையில் உடனடி தீர்வு அல்லது தேர்தல் வாக்குறுதிகளாக திமுகவினர் இதை வழங்குவார்கள் என்று ஆளும் திமுக தரப்பு கூறி உள்ளது.
ஏற்கனவே 2026ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையானது ஜனவரி 7ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் இதே காலகட்டத்தில், ஜனவரி 9ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அரசு பொங்கல் பண்டிகைக்கான கரும்பு கொள்முதலை ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திற்குப் பிறகு மட்டுமே தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகை
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பத்தில் ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனினும், மாநிலத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இம்முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. ரூ.5,000 வழங்கினால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, ரூ.3,000 வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இதனால் பெரிய நிதிச் சுமை இருக்காது என முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications