Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக திறக்க போகும் "பண்டோரா பாக்ஸ்".. விஜய் + எடப்பாடிக்கு.. ஒரே நேரத்தில் செக் வைக்க பயங்கர பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இன்னும் திறக்க வேண்டிய "பண்டோரா பாக்ஸை" திறக்கவே இல்லை.. அதை திறந்ததும் எதிர்க்கட்சிகளுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என்று திமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த நெருக்கடி வேறு எதுவும் இல்லை.. ஆளும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் என்கிறார்கள்.

அதாவது 2026 தேர்தலுக்காக அவர்கள் கொடுக்க போகும் வாக்குறுதிகள் கண்டிப்பாக எடப்பாடி, விஜய் உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பை பெரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்று கூறப்படுகிறது.

mk stalin dmk

1. பெண்களுக்கான புதிய திட்டங்கள் இதன் மூலம் கொண்டு வரப்படும்.

2. முக்கியமான பல இலவச திட்டங்கள் இதன் மூலம் கொண்டு வரப்படும்.

3. இளைஞர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் திட்டமிட்டு வரப்படுகிறது.

4. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026ஐ முன்னிட்டு பல புதிய நலத்திட்டங்களை ஆளும் திமுக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தேர்தல் வாக்குறுதிகளும் வலிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலுக்கு பின் மகளிர் உரிமை தொகை உயர்த்துவது, அரசு ஊழியர்களுக்கு நலத்திட்டங்கள், புதிய இலவசங்கள் என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளன.

புதிய செயலி அறிமுகம்

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் (விவசாயிகள், வணிகர்கள், தொழில் அதிபர்கள் உட்பட) கருத்துக்களைப் பெற ஜனவரி 3, 2026 சனிக்கிழமை புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் ஏற்கெனவே தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவை கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்த ஸ்டாலின், புதிய செயலி, வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் வழியாக கருத்துகள், பரிந்துரைகளைச் சேகரிக்கும் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க இந்த செயலி அமைக்கப்படுகிறது. அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டாலின் எடுக்கும் சர்வே

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சர்வே ஒன்றை நிர்வாகிகள் மூலம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்று, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தினருடனும் பேச உள்ளது. பல முக்கியமான கேள்விகளை கேட்க உள்ளனர். பொங்கல் பரிசு வந்ததா, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவி தங்கள் வீட்டைச் சென்றடைந்ததா என விசாரித்து, ஒரு படிவத்தை வழங்கி விவரங்களை பெறுவார்கள்.

படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்படும். அதில் கோரிக்கையின் நிலையை அறிய முடியும். அவர்களுக்கு இருக்கும் கோரிக்கைகளை கேட்டு, அதன் அடிப்படியில் உடனடி தீர்வு அல்லது தேர்தல் வாக்குறுதிகளாக திமுகவினர் இதை வழங்குவார்கள் என்று ஆளும் திமுக தரப்பு கூறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+