ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்!
சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொகுதி பங்கீட்டிடை முடித்திருக்கும் நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களாக இருந்து திமுகவில் இணைந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரம் வெளியாகியிருக்கிறது.
வழக்கம்போல போடியில் ஓ.பன்னீர்செல்வம் களமிறங்குகிறார். பலமுறை அதிமுக சார்பில் இங்கிருந்து வென்ற ஓபிஎஸ், தற்போது திமுக சின்னத்தில் அல்லது ஆதரவில் போட்டியிடுவது அந்தத் தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் செல்வாக்குமிக்க தலைவரான ஆர். வைத்திலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் நீண்ட காலம் அமைச்சராகவும், முக்கியப் பொறுப்புகளிலும் இருந்த இவர், தற்போது திமுக கூட்டணியுடன் கைகோர்த்துள்ளது டெல்டா அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
வைத்திலிங்கம் கடந்த 2001 முதல் 2011 வரை தொடர்ந்து மூன்று முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2016-ல் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (சுமார் 3,645 வாக்குகள்) திமுக வேட்பாளர் மா. இராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2021-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு சுமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
தென் தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பி.எச். மனோஜ் பாண்டியன், ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன், திமுக வேட்பாளர் பூங்கோதையை சுமார் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக 2001 ஆம் ஆண்டு சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications