கேம் சேஞ்சரான திமுக.. அதிமுகவினரின் சரணாலயமான அறிவாலயம்! லிஸ்ட் பெருசாகிட்டே போகுதே! எண்டே கிடையாதா?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளருமன வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்திருக்கிறார். ஜெயலலிதா காலத்தில் டெல்டாவின் முக்கிய தலைவராக விளங்கிய அவர் திமுகவில் இணைந்து இருப்பது அங்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி, ரகுபதி, முத்துச்சாமி, தங்க தமிழ்ச்செல்வன், மனோஜ் பாண்டியன் தற்போது வைத்தியலிங்கம் என அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற முக்கிய புள்ளிகளின் பட்டியல் நீண்டு வருகிறது.
தமிழகத்தில் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள மண்டலங்களில் ஒன்று டெல்டா. அங்குள்ள ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் வைத்தியலிங்கம். ஜெயலலிதா, இருந்தபோது முக்கிய பதவிகளை வகித்தவர்.
ஒரத்தநாடு - தெலுங்கன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்தவர். அப்போதிலிருந்து அதிமுகவின் அனுதாபியாக இருந்தார். தொடர்ந்து சசிகலா உள்ளிட்டோரின் ஆதரவால் அதிமுகவில் வளர தொடங்கிய அவர், எம்எல்ஏ, அமைச்சர், மாநிலங்களவை எம்பி என பல பதவிகளை பெற்றவர்.

வைத்தியலிங்கம்
அதிமுகவில் மாவட்ட செயலாளர் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி என பல பதவிகளை வகித்திருக்கிறார். 2011 முதல் 2016 வரை தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வீட்டு வசதித் துறை அமைச்சராக பணியாற்றியவர். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வைத்திருக்கிறார். 2016 முதல் 2021 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம்
2021 சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அந்த பதவியை ராஜினாமா செய்தார். ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக விளங்கி வந்த அவர், கட்சி மீண்டும் சேர்ந்த போது ஓரம் கட்டப்பட்டார். தொடர்ந்து திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம் கைகோர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வந்த நிலையில் அதிருப்தியில் இருந்த வைத்தியலிங்கம் திடீரென திமுகவில் சேர்ந்து இருக்கிறார். அவரது மகனும் திமுகவில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கேம் சேஞ்சர்
சமீபத்தில் திமுக அமைச்சர்களின் ஏற்பாட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்கள் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமாகி வருவது குறிப்பிடத்தக்கது. மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், சுப்புரத்தினம் வரிசையில் தற்போது வைத்தியலிங்கமும் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற நிர்வாகிகள் பட்டியல் நீண்டு வருகிறது. தற்போது திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் என கட்சியிலும் ஆட்சியிலும், குறிப்பிட்ட தகுந்த அளவு இடத்தை அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தான் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் அதிமுக மாஜிகள்
அமைச்சரவையை பொறுத்தவரை முத்துச்சாமி, ரகுபதி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், எவ வேலு, பிகே சேகர் பாபு ஆகியோர் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அதிமுகவில் இருந்து அமமுக சென்று அதற்கு பிறகு திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இணைவு
இது மட்டுமல்லாமல் குறிப்பிடத் தகுந்த தலைவர்களாக அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் தொடங்கி விளாத்திகுளம் மார்க்கண்டேயன், கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், நடராஜன்,தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், எஸ்எம் உதயகுமார், கோவிந்தராஜன், பிகே முத்துசாமி, கே மனோகர், குப்புசாமி, செந்தில்குமார், என் கந்தசாமி, வேலுச்சாமி, பரமசிவம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஜெயலலிதாவின் மறைவு
அதுமட்டுமல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சரான டிகே நடராஜன், அதிமுக முன்னாள் எம் பி கோவிந்தராஜன், தர்மபுரி அதிமுக மாவட்ட செயலாளர் எம்ஜி சேகர், தோப்பு வெங்கடாசலம் என திமுகவுக்கு சென்றவர்கள் பட்டியல் தொடர்ந்து நீண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வைத்தியலிங்கமும் இணைந்து இருக்கிறார். 2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும், 2019 நாடாளுமன்ற தோல்வி, 2021 சட்டமன்ற தோல்விக்கு பிறகும் பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் திமுக தரப்பில் தஞ்சம் புகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications