ஓய்வெடுக்க சொகுசு வேன் இல்லை! போட்டோ ஷூட் இல்லை! சாலையோரம் தூங்கி குமரி அனந்தன் நடத்திய பாதயாத்திரை!
சென்னை: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்னர் 15 பேருடன் குமரி அனந்தன் நடத்திய பாதயாத்திரை குறித்த ஃபிளாஷ்பேக்கை பகிர்ந்துள்ளார் திமுக பொறியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி. கருணா.
85 வயதில் குமரி அனந்தன் நடத்திய அந்த நடைபயணம் தான் "நிஜமான நடைபயணம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக எஸ்.கே.பி. கருணா பகிர்ந்துள்ள ஃபிளாஷ்பேக் வருமாறு;

''2016 ஜனவரி ஒன்று. சென்னையில் கழகத் தலைவரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்று ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மதுராந்தகம் அருகில் பத்து பதினைந்து பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைக் கடக்கும்போது கவனித்ததில் ஐயா குமரி அனந்தன் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார்.''
''உடனே காரை இருந்து இறங்கி அவரைப் பார்த்து வணங்கி வாழ்த்து பெற்றேன். சில மணி நேரம் அவருடன் நடந்தேன். அப்போது அவருக்கு வயது 85. சென்னையில் இருந்து குமரி வரை நடந்தே செல்கிறார். பின்னால் ஒரு சிறு வாகனத்தில் அவர்களின் உடமைகளும், பதாகைகளும் வந்தது. நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அது "நிஜமான நடைபயணம்".
''இப்போது அதை நினைத்துப் பார்க்கிறேன். தன்னை அத்தனை வருத்திக் கொண்டு அவர் நடந்து சென்றதில் அவருக்கு எந்த அரசியல் ஆதாயமும் இல்லை. பெரும் அதிகார மையங்கள் அதை தொடங்கி வைக்கவில்லை. வழியெங்கும் ஆர்ப்பாட்டமான வரவேற்புகள் இல்லை. குரான், பைபிள் பரிசளிப்பு போன்ற செட்டப்புகள் இல்லை. தமிழ்நாட்டின் மொத்த ஊடகங்களும் முழுநேரம் அதை பின் தொடரவில்லை.''
''ஆனாலும் ஒரு மனிதன் தன்னுடைய நம்பிக்கையை, சமூகத்தின் பாற்கொண்ட அக்கறையை தனது ஆசான் மகாத்மா காந்தியின் வழியில் வெளிப்படுத்தினார். அத்தகைய மனிதர்களை அங்கீகரித்து பின்பற்றிட ஒட்டுமொத்தச் சமூகமாக நாம் தவறி இருக்கிறோம். 'குமரி அனந்தன்' களை காங்கிரஸ் கட்சி தவற விட்டதால்தான் சங்பரிவார்கள் எழுச்சி பெற்றனர்.''

''மகாத்மாவை நாடு மறந்ததால்தான் கோட்சேக்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கியது. சாதி, மதங்கள் வெறியாக மாறிட அனுமதித்ததின் விளைவாகதான் நாட்டின் பன்முகத்தன்மையே கேள்விக்குறி ஆகியுள்ளது.நாடே மதிக்கத்தக்கச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெறும் சாதிச் சங்கங்களின் அடையாளத் தலைவர்களாக குறுக்கப்பட்டனர். ''
''காந்தியும், காமராஜரும் அரசியல் புரோக்கர்களின் அடையாளச் சின்னமாக மாற்றப்பட்டனர். நாட்டின் இன்றைய நிலைக்கு ஒரு கூட்டுச் சமூகமாக நாம் அனைவருமேதான் பொறுப்பு. நாம் அனைவருமே சேர்ந்து தோண்டிக் கொண்ட படுகுழி இது. நாம் அனைவரும் இணைந்தேதான் மேலேறி வந்தாக வேண்டும்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications