மருத்துவ காப்பீடு உயர்வு.. பட்ஜெட்டில் ஒதுக்கியதோ ரூ.1,400 கோடி.. எப்படி சாத்தியம்? எழிலன் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பட்ஜெட்டில் மருத்துவ காப்பீடுக்கு ரூ.1,400 கோடி தான் ஒதுக்கி இருக்கும் சூழலில், தற்போது ரூ.5 லட்சத்தில் இருந்துரூ.25 லட்சமாக உயர்த்தும் போது, காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4 ஆயிரம் கோடியாக உயர்கிறது. இது எப்படி சாத்தியம் என்றும் திமுக எம்எல்ஏ எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டசபைக் கூட்டத்தொடரில் விசிக எம்எல்ஏ ஜோதிமணி, தொகுதி பணிகளை பார்வையிடம், பிரச்சனைகளின் போது விரைவாக செல்லவும் எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் விசிக எம்எல்ஏ ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

DMK

அதேபோல் எம்எல்ஏ-க்கள் தங்களுக்கு உதவியாளர்களை நியமிக்க மாதம் ரூ.25 ஆயிரம் படி வழங்கப்படும். ஓட்டுநர், வாகன பராமரிப்பு, எரிபொருளுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் படி வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு தவெக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன் நாகநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எம்எல்ஏ-க்களுக்கு கார், ஓட்டுநருக்கான ஊதியம், பெட்ரோல் படி மற்றும் உதவியாளருக்கான ஊதியம் ஆகியவை கொடுப்பதாக கூறி இருக்கின்றனர். இப்போது மிகவும் பொருளாதார நெருக்கடியில் தமிழக அரசு இருப்பதாக முதல்வர் விஜய் கூறி இருந்தார். ஒவ்வொரு விஷயத்தயும் நிதி கட்டுப்பாட்டுடன் செய்வதாக கூறினர்.

ஆனால் திடீரென கார் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாங்கள் கார் வழங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தற்போதைய சட்டசபையில் 234 பேரில் 190 பேர் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருபவர்கள். இதற்கான ஏடிஆர் ரிப்போர்ட் வந்துள்ளது. அதனால் தேர்த பிரமாண பத்திரத்தில் யாரிடம் கார் உள்ளது என்பதை பார்த்து, தேவைப்படும் நபர்களுக்கு கார் வழங்கலாம்.

கடந்த ஆட்சியில் கஜானா காலி செய்துவிட்டு சென்றுவிட்டார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் இப்படியொரு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த அறிவிப்பு கவர்ச்சியானது.. நரேட்டிவ் செட் செய்ய வேண்டுமென்றால் பயன்படலாம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக பட்ஜெட்டில் மருத்துவ காப்பீடுக்கு ரூ.1,400 கோடி தான் ஒதுக்கி இருக்கின்றனர்.

தற்போது ரூ.5 லட்சத்தில் இருந்துரூ.25 லட்சமாக உயர்த்தும் போது, காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4 ஆயிரம் கோடியாக உயர்கிறது. இது எப்படி சாத்தியம் என்றும் திமுக எம்எல்ஏ எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார். எழிலஇன் பேச்சுகள் திமுகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+