சேலத்தில் 50க்கும் மேல் பெண்கள் பாதிப்பு.. யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது தவெக? ரகுபதி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த தவெக நிர்வாகி மணிகண்டனை மட்டும் கைது செய்துவிட்டு வழக்கை மூடி மறைத்து யாரையோ காப்பாற்ற தவெக அரசு முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக ஆட்சியின் போது ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்க தாமதமானது. இதனால் வீரமணியை காப்பாற்ற திமுக முயற்சித்ததாக தவெக குற்றம்சாட்டி வருகிறது.

DMK

இந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2025ல் தன்னார்வலர் மூலம் வந்த புகாரின் அடிப்படையில், உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தன்னார்வலர் அளித்த வீடியோ சாட்சிகள் சரியாக இல்லை. வழக்கை திரும்ப பெறுகிறோம் என்று நீதிமன்றத்தில் சொல்லவில்லை.

புதிய ஆதாரங்கள், சாட்சியங்கள் கிடைக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றே கூறினோம். தமிழ்நாட்டில் தவெக நிர்வாகிகள் மீதே அதிகளவிலான பாலியல் புகார்கள் வருகின்றன. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுடன் சமரசம் செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சேலத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி மணிகண்டன் மீது ஏராளமான பாலியல் புகார்கள் வந்தன.

50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த தவெக நிர்வாகி மணிகண்டனை மட்டும் கைது செய்துவிட்டு வழக்கை மூடி மறைத்து யாரையோ காப்பாற்ற தவெக அரசு முயற்சிக்கிறது. அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல பெண்களை ஏமாற்றி, மிரட்டி, வீடியோ எடுத்திருக்கிறார். அவருடன் ஒரு கும்பலே இருக்கிறது.

ஆனால் மணிகண்டன் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருடன் இருந்த யார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. தவெக அரசு எந்த விஷயமாக இருந்தாலும், அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பொய்.. மக்கள் எது பொய், எது உண்மை என்றே தெரியாமல் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+