காற்று வாங்க போனேன்... கவிதை வாங்கி வந்தேன்... மாமல்லபுரத்தில் கே.என்.நேரு
சென்னை: திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு, மாமல்லபுரத்தில் மாலை நேரத்தை கழித்து மனம் விட்டு கட்சி நிர்வாகிகளுடன் பேசியுள்ளார்.
தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் கே.என்.நேரு சென்னையில் இருக்கிறார். இந்நிலையில் தனது நண்பரும், கடலூர் மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் மாமல்லபுரத்திற்கு விசிட் அடித்துள்ளார்.
அங்கு கே.என். நேருவும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் குடும்ப உறவுகள், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளனர்.

பாராட்டு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக திருச்சி மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றியதால் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு கடந்த ஒரு வாரமாகவே உற்சாகமாக காணப்படுகிறார். தலைமையின் பாராட்டு அவருக்கு மேலும் பூஸ்ட் அளித்துள்ளதால் தன்னை காணவரும் கட்சி நிர்வாகிகளிடம் அன்பு மழை பொழிந்து வருகிறார்.

மாமல்லபுரம்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை வரை நடப்பதால் கே.என். நேரு சென்னையில் இருக்கிறார். இந்நிலையில் மாலை நேரத்தில் பொழுது போகாததால் அவருடைய நண்பரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் மாமல்லபுரத்திற்கு விசிட் அடித்தார். அலைகள் ததும்பி வந்த காட்சிகளை கண்டவாறு பல்வேறு விவகாரங்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளனர்.

இருவர்
திமுக மாவட்டச் செயலாளர்களை பொறுத்தவரை எ.வ.வேலு, பொன்முடி, ஒரு கோஷ்டி என்றால் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு கோஷ்டி. தொடக்கம் முதலே பல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பொதுக்குழு கூட்டம் ஆகிய படங்களை பார்த்திருந்தால் இவர்கள் ஒன்றாக அமர்ந்திருப்பது தெரிந்திருக்கும்.

வியப்பு
கே.என்.நேரு மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்றதை அவருடைய ஆதரவாளர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். காரணம் அவர் இது போன்று வெளியிடங்களுக்கு எல்லாம் எப்போதும் செல்லமாட்டார். ஊரில் இருந்தால் கட்சி அலுவலகம், நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள், கூட்டங்களில் கலந்துகொள்வார். சென்னையில் இருந்தால் மு.க.ஸ்டாலினுடன் பயணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications