நான் ரெடி நீங்க ரெடியா: திமுக நிர்வாகியின் குத்தாட்டம்: வீணாகும் கட்சியின் பிம்பம்
சென்னை; சமீப காலமாக அடிமட்ட பொறுப்பில் இருக்கும் திமுக நிர்வாகிகள் சிலர் பொதுமக்களை தாக்கி கைதாவது, சாலையில் வாகனத்தை நிறுத்தி சண்டை போடுவது, குத்தாட்டம் போடுவது என்று செய்திகளில் சிக்குவது திமுகவுக்கும், முதல்வர் கட்டமைக்கும் இமேஜுக்கும் சிக்கலை உண்டாக்கும் என்கிற கருத்து அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது.
Recommended Video

வீணாகும் கட்டமைப்பு, பழைய பாணியில் சில நிர்வாகிகள்
முதல்வர் எனும் பெரிய பொறுப்பில் இருக்கும் தலைவர் ஸ்டாலின் பணிவு காட்டி மக்கள் மனதில் உயரும்போது கடைநிலை நிர்வாகிகள் பழைய காலத்துப்பாணியிலேயே செயல்படுவது அனைத்து உழைப்புகளும் வீணாகிப்போகும் என்பதை திமுக தலைமை உணர்ந்து நடவடிக்கை எடுக்கிறது. ஆனாலும் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட அதிகார அத்துமீறல்கள், நில அபகரிப்புகள், தனிநபர் தாக்குதல்கள், குத்தாட்டம் போடும் நடவடிக்கைகள் காரணமாக சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆட்களே திமுக என்பதாக பேசுபொருளாகிறது.

கட்சியை பாதிக்கும் சிலரின் செயல்பாடுகள்
முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுபோன்ற சர்ச்சைகள் அவரைச் சார்ந்தோரால் நடத்தப்படும்போது அவருக்கும் கெட்டப்பெயர் சேர்ந்தே கிடைக்கும். பத்திரிக்கையாளர்களை வாயா போயான்னு பழைய பாணியில் பேசும் கட்சியினர், அமைச்சர்கள் அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் அதை நட்பு காரணமாக ஏற்றுக்கொண்டாலும், காணொளியில் அது வைரலாகும்போது எங்கோ அதை பார்ப்பவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்பதை யார் தீர்மானிக்க முடியும்.

கூத்துகள் பாட்டுகள், பொதுவெளி அத்துமீறல்கள்
இன்னும் சிலர் மதுபோதையில் தகராறு செய்வது, நாங்கத்தாண்டா இனிமேல் என லோக்கலில் உள்ளவர்களுடன் மோதுவது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் மதிப்பை கெடுக்கும். இது மிகவும் கஷ்டப்பட்டு கட்டமைக்கும் பிம்பத்தை சீட்டுக்கட்டு கலைப்பதுபோல் ஒரு நொடியில் சரித்துவிடும்.

குத்தாட்டம் போட்ட நிர்வாகி
மக்கள் பணியில் இருப்பவர்கள் மதிப்பு மிக்கவர்களாகவும், அப்பகுதி மக்களின் தேவை அறிந்து செயல்பட்டு செல்வாக்கோடு வாழ்வதன் மூலம் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுவார்கள். இன்று சமூக வலைதளங்களில் பரவும் ஒரு காணொளி கேலியுடன் விமர்சிக்கப்படுகிறது. அதில் கார் கதவை திறக்கிறார் கரை வேட்டி கட்டிய திமுக பிரமுகர். வயது 60 க்கு மேலிருக்கும். கார் கதவை திறக்கும்போதே நான் ரெடி நீங்க ரெடியா என்கிற குத்தாட்டப்பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

அடடா என்ன ஆட்டம், ஆணாகவும், பெண்ணாகவும் பாவனை
இவர் ஒரே நேரத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் பாவனை காட்டுகிறார். வீடியோ எடுப்பதை கண்டு இன்னும் உற்சாகமாகி ஆடுகிறார். இந்த வீடியோவை எடுத்தவர் அதை வாட்ஸ் ஆப்பில் போட அது வைரலாகி ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர் ஒருவர், "இதுபோன்ற செயல்கள் முகச்சுளிப்பை கொண்டுவரும். கட்சித்தலைமை நேரம் பாராமல் உழைப்பதும், அடுத்தடுத்த பருவமழை பாதிப்பை எதிர்க்கொள்ள அடுத்தடுத்து ஆலோசனைக்கூட்டங்கள் என அலையும்போது ஒரு கட்சி நிர்வாகி நான் ரெடி நீங்க ரெடியான்னு சினிமா பாடலுக்கு போடும் குத்தாட்டத்தை தமிழக மக்கள் மட்டுமல்ல தலைமையும் ரசிக்காது.

மூன்றாவது கண் அனைத்து இடத்திலும் உள்ளது. இன்னும் மாறாததால் வரும் பிரச்சினை
பொதுவெளியில் கட்சி நிர்வாகிகள் எப்படி நடக்க வேண்டும், பேச வேண்டும் செயல்பட வேண்டும் என்பதை பழைய காலம் போல் நினைத்து செயல்படுவதால் வரும் பிரச்சினை. இது சமூக வலைதளம் காலம். முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டா என அடுத்த நொடி கோடிக்கணக்கானோர் பார்ப்பர். கேலிப்பொருளாகும். மீம்ஸ் போடப்படும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.

யார் இந்த ஹார்லிக்ஸ் பார்ட்டி திமுக நிர்வாகி, மனைவி கவுன்சிலர்
ஹார்லிக்ஸா மாறிவிட நான் ரெடி என்னை அப்படியே சாப்பிட நீங்க ரெடியா என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடியவர் ஷாஜகான், திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதி. பழனி திமுக ஒன்றியத்தில் பொறுப்பில் இருக்கிறார். இவரது மனைவி பழனி திமுக சிவகிரிப்பட்டி ஊராட்சி 4 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் என்கிற தகவல் திமுக வட்டாரத்தில் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications