மேயர் பிரியாவை மிரளவிட்ட திமுகவினர்! 40 ஆண்டாய் கட்சியில் இருக்கோம் என வாக்குவாதம்.. பரவும் வீடியோ
சென்னை: சென்னையில் நடந்த அரசு விழாவில் 40 ஆண்டாய் கட்சியை வளர்க்கிறோம் என்று திமுக நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தததால் மாநகராட்சி மேயர் பிரியா மிரண்டு போனார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் பரவி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சி மேயராக இருப்பவர் பிரியா. இப்போது அவருக்கு வயது 31 தான் ஆகிறது. திமுகவை சேர்ந்த அவர் இளம் வயதிலேயே சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. மேயர் பிரியாவை சுற்றி நிற்கும் திமுகவினர் அவரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அந்த வீடியோவில், ‛‛வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர்கள் கேட்கிறாங்கல்ல.. பதில் சொல்லுங்க.. 40 வருஷமா கட்சியில இருக்கோம். எங்களுக்கு மரியாதை இல்லையா?'' என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு பிரியாவுக்கு ஆதரவாக சிலர் கேள்வி கேட்பவர்களை சமாதானம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகவில்லை.
இதையடுத்து பிரியா நேரடியாக பேசுகிறார். தன்மீது கோபமான நபரை பார்த்து ‛‛அண்ணா நான் இப்போது ஏதாவது சொன்னேனா அண்ணா'' என்று சொல்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோ பற்றி விசாரித்தபோது அந்த சம்பவத்தின் பின்னணி குறித்த விபரம் கிடைத்துள்ளது. அதாவது சென்னை வியாசர்பாடியில் மேயர் மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் இரவு நேர பாடசாலை மையம் மற்றும் மாணவர் திறன் மேம்பாட்டு மைய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 6ம் தேதி மேயர் பிரியா வியாசர்பாடியில் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சென்றார்.
அப்போது மாநகராட்சி சார்பில் அங்குள்ள திமுக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமான மாவட்ட செயலாளரும், பெரம்பூர் திமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான ஆர்டி சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு வந்து விழாவுக்கு அழைப்பு விடுக்காதது பற்றி கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்ததும், அதன்பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து பூமிபூஜை நடத்தியதும் தெரியவந்துள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications