19 ’தலை’ ராவணன் போல திமுக கூட்டணி! முக ஸ்டாலின் போட்ட மாஸ்டர் ப்ளான்! இதுவரைக்கும் அப்படி நடந்ததில்ல
சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த கட்சிகள் அப்படியே 2026 தேர்தலில் தொடர்வதோடு புதிதாக ஒபிஎஸ், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்றன. இதனால், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை 19-ஆக உயந்திருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கூட்டணியில் புதிய கட்சிகளாக தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது.
இதனால் கடந்த 2021 தேர்தலை விட குறைந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகள் ஏற்க வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், கூட்டணியில் முக்கிய பங்காற்றும் காங்கிரஸ் கட்சியுடன் நடைபெறும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தல்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை அதற்கு மேலான தொகுதிகளை கோரியதால் பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் இருந்து சிக்கல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் இடங்கள் குறைவாக உள்ளன என்பது திமுக தரப்பின் நிலைப்பாடாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைகளில், 40 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என காங்கிரஸ் தரப்பு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
மு.க. ஸ்டாலின்
ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தெளிவாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் தற்காலிக தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டில் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸுக்கு 25 முதல் 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் கூடுதல் பங்கு வழங்கப்படும் என்றும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகள்
இது ஒருபுறம் இருக்க காங்கிரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் திமுக தனது கூட்டணியை உறுதிப்படுத்திக் கொண்டே செல்கிறது. சில கட்சிகளை கூட்டணியில் சேர்த்தும், சில கட்சித் தலைவர்களை கட்சியிலேயே சேர்த்தும் அதிர்ச்சி கொடுத்து வருகிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின். அந்த வகையில் தேமுதிக கூட்டணிக்கு வந்திருக்கும் நிலையில் ராமதாஸும் கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் விட தமிழ்நாடு அரசியலில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் திமுக உடனேயே இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில் 2021 தேர்தலை விட 2026 சட்டமன்ற தேர்தலை மிகப் பெரிய கூட்டணி பலத்துடன் திமுக சந்திக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த கட்சிகள் அப்படியே 2026 தேர்தலில் தொடர்வதோடு புதிதாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்றன. இதனால், திமுக கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை 19-ஆக உயந்திருக்கிறது.
திமுக கூட்டணி கட்சிகள்
தற்போதைய சூழலில், 1. திமுக, 2. காங்கிரஸ், 3. மதிமுக, 4. இந்திய கம்யூனிஸ்ட், 5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 6. விடுதலை சிறுத்தைகள், 7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, 9. மனிதநேய மக்கள் கட்சி, 10. அகில இந்திய பார்வர்டு பிளாக், 11. தமிழக வாழ்வுரிமை கட்சி, 12. மக்கள் விடுதலை கட்சி, 13. ஆதிதமிழர் பேரவை, 14. மக்கள் நீதி மய்யம், 15. தேமுதிக, 16. எஸ்டிபிஐ, 17. மனித நேய ஜனநாயகக் கட்சி, 18. முக்குலத்தோர் புலிப்படை, 19. கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை திமுக கூட்டணியில் உள்ளன.
வலுவான திமுக
இது மட்டுமில்லாமல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை நடத்தி வந்த ஓ பன்னீர்செல்வம், தற்போது திமுக உடன் பிறப்பாகவே மாறி இருக்கிறார் முன்னாள் எம்பியான அவரது மகன் ரவீந்திரநாத், ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், உள்ளிட்ட ஒரு திமுகவில் இணைந்திருக்கின்றனர். இவர்களெல்லாம் கடந்த தேர்தல்களை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களும் திமுகவில் இணைந்திருப்பதால் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று விடலாம் என நம்பிக்கையில் இருக்கிறது திமுக என்கின்றனர்.
-
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
தேர்தல் தேதி கூட தெரியலையே.. இவர் தான் தவெக வேட்பாளராம்.. ஒரே அவமானமா போச்சே -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா?












Click it and Unblock the Notifications