திமுகவில் பாதி அதிமுக மாஜி.. சிட்டிங் சீனியர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! 2026 பெரும் பஞ்சாயத்து!
சென்னை: திமுகவுக்கு ஒரு புது சிக்கல் முளைத்திருக்கிறது. குறிப்பாக திமுகவின் சீனியர் சிட்டிங் அமைச்சர்கள் சிட்டிங் எம்எல்ஏக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். திமுகவை தவிர அனைத்து கட்சிகளில் இருந்தும் வந்தவர்களுக்கு திமுகவில் இடம் கொடுத்திருக்கும் நிலையில், தாங்கள் எந்த தொகுதியில் நிற்பது என தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.
கட்சியிலும் சரி கூட்டணிலும் சரி ஓவர் லோடு மனநிலையில் இருக்கிறது திமுக. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற கணக்கின் படி பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வந்திருக்கிறது திமுக தலைமை
ஏற்கனவே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 13 கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்த நிலையில் 2026 தேர்தலில் அந்த எண்ணிக்கை 19 ஆக கடந்திருக்கிறது. இன்னும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம் எனவும் சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல்
கடந்த 2026 தேர்தலில் திமுகவை எதிர்த்து களம் கண்ட தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் தற்போது திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பலர் தற்போது திமுகவில் இணைந்து இருக்கின்றனர். தற்போதைய சூழலில் திமுகவில் இருக்கும் முக்கிய அமைச்சர்களின் பெரும்பாலானோர் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக உட்கட்சி சிக்கல்
எவ வேலு, ராஜகண்ணப்பன், சேகர் பாபு, ரகுபதி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி என பலரும் அதிமுகவில் இருந்தவர்கள். அது மட்டுமல்லாமல் தோப்பு வெங்கடாசலம், தங்க தமிழ்செல்வன் என எம்பிக்களாகவும் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர்கள் அதிமுகவினர் தான். போதாக்குறைக்கு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மைத்ரேயன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் என பல அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவியுள்ளனர்.
அதிமுக தாவல்
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அவரது மகன் ஓபி ரவீந்திரநாத் குமார் ஆகியோர் திமுகவில் இணைந்து இருக்கின்றனர். இது ஒரு வகையில் திமுகவுக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கை என்றாலும் திமுகவில் இருக்கும் சில சீனியர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் தற்போது இணைந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது,
அதிமுக
அதோடு திமுகவினரின் இடங்களை மாற்றி அதிமுகவினர் ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது. சொல்லப்போனால் திமுக பட்டியல் வெளியாகி அதில் 170 பேர் இடம் பெற்று இருந்தால் குறைந்தது 50 பேராவது அதிமுகவினர் அதில் இருப்பார்கள் என்பதுதான் நிதர்சனம். இதனால் ஆண்டாண்டு காலமாக திமுகவில் இருந்த உண்மையான உடன்பிறப்புகள் சிலர் அதிருப்தியில் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
ஸ்டாலின் தலைமைக்கு சவால்
தேர்தல் நேரத்தில் சில கணக்கீடுகள் கைகொடுக்கும் என்றாலும் உண்மையான தொண்டர்களின் மனநிலையோ வேறாக இருக்கிறது. சில மாவட்டங்களில் திமுகவினர் பதவி விலகுவதையும் பார்க்க முடிகிறது. அதிமுகவினரை அள்ளி வந்தாலும் அது தேர்தலில் திமுகவுக்கு பலம் சேர்க்குமா அல்லது சீனியர்களை சிக்கலுக்கு உள்ளாக்குமா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications