அப்பா திமுக - மகன் பாஜக! வன்னியர் சமூக "குலசாமி" ராமதாஸ்! பணிய வைக்க முடியாது.. பாமகவில் அதிர்ச்சி
சென்னை: பாமக இப்படி பிரிந்து கிடப்பது, பாஜகவுக்கு கவலையை தந்துள்ளதாம்.. இதற்கு தீர்வு என்ன செய்வதென்று தெரியாமல் பாஜக உள்ளதாக தெரிகிறது. எனினும் இப்போதைக்கு பீகார் தேர்தலிலேயே அவர்களின் முழுகவனமும் உள்ளது.. வரும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு அமித்ஷாவின் கவனம் இந்த பக்கம் திரும்பும்" என்று பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்து சொல்லி உள்ளார் பத்திரிகையாளர் மணி.
TamilKural என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "அன்புமணி, சௌமியா தனி, நாங்கள் தனி பாமக என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.. நீர் அடிச்சு நீர் விலகுமா? எவ்வளவு பேசினாலும் மகன் இல்லை என்பது ஆகிவிடுமா? நாளைக்கு அனைவருமே ஒன்றுசேர்ந்து கொள்வார்கள்.. அப்போது இது குடும்ப சண்டையாகிவிடும்..

ஸ்ரீகாந்தி அன்புமணியின் அக்கா.. அன்புமணியும் ஸ்ரீகாந்தியும் சம்பந்திகளும் ஆவர்.. அன்புமணியின் மகள், ஸ்ரீகாந்தியின் மகனை திருமணம் செய்துள்ளார்.. பெண்ணை கொடுத்து பெண்ணை எடுத்த சம்மந்திகள்.. அப்படியிருக்கும்போது ஸ்ரீகாந்திக்கு எதிராக அன்புமணியும், அன்புமணிக்கு எதிராக ஸ்ரீகாந்தியும் என்ன அரசியல் செய்துவிடப்போகிறார்கள்?
இப்போது மற்ற அரசியல் கட்சிகள், தங்களது கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணியிடம் துவங்குவார்களா? ராமதாஸிடம் துவங்குவார்களா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது..
டாக்டர் ராமதாஸ், அன்புமணி
இதற்கு ஒரு காம்ப்ரமைஸ் பாமகவில் செய்து கொள்வார்கள்.. இருவருமே தனி கட்சி வைத்து கொள்வார்கள்.. இருவரையுமே என்டிஏ தன்னுடைய கூட்டணிக்குள் வைத்து கொள்ளும். எப்படி, சரத்பவாகும், காங்கிரசும் பிரிந்தாலும், இருவருமே இந்தியா பிளாக்கில் இருக்கிறார்களோ, அதுபோல பாமகவும் ஆகிவிடும்..
தேர்தல் ஆணையத்தின்படி, இப்போதைக்கு கட்சி அன்புமணியிடம்தான் உள்ளதால், ராமதாஸ் தனி கட்சி வைத்து கொள்ள வேண்டியதுதான்.. அப்படியே தனி கட்சி வைத்து கொண்டாலும், பாமகவை போல, அதுவும் என்டிஏ-க்குள்ளே தான் இருக்கும்..
பாஜகவுடன் ஸ்டேஜ் ஷேர் செய்ய மாட்டேன், ஆனால் கலைஞருடன் கூட்டணியில் இருப்பேன் என்று 2001-ல் பா.சிதம்பரம் சொன்னதை போலதான் இப்போதும் நடக்க போகிறது.
அப்பா திமுக, மகன் பாஜக
அதாவது, ஜெயலலிதாவுடன் தமாகா சென்றதால், மூப்பனாரிடமிருந்து பிரிந்து வந்து ஜனநாயக பேரவை என்ற கட்சியை துவங்கினார் பா.சிதம்பரம்.. அப்போது 2001-ல் நடந்த தேர்தலில் பாஜகவை நேரடியாக ஆதரிக்க முடியாமல், திமுக கூட்டணியை ஆதரித்தது.. அதுபோன்ற சூழல் இப்போது வந்துள்ளது.. அந்தவகையில் 2 பாமகவும் என்டிஏ கூட்டணிக்குள் இருக்கும்..
அல்லது அப்பா திமுகவில் இருப்பார், மகன் பாஜகவில் இருப்பார். இதில் யார் வெற்றி பெற்றாலும் லாபம் குடும்பத்துக்குத்தான்,. அன்புமணி வெற்றி பெற்றாலும், அவரது சொந்த காந்தி வெற்றிலும், சொத்து குடும்பத்துக்குள்ளேதான் இருக்க போகிறது. இது இருவரும் சேர்ந்த நாடகமா? என்றும் நமக்கு தெரியவில்லை..
எப்போதுமே ஒரு பிரச்சனை அல்லது போர், என்றால், அங்கே வெற்றி தோல்வி இருக்கும்.. ஆனால் இங்கே எதுவானாலும், லாபம் அந்த குடும்பத்துக்கே.
குருமூர்த்தி, அமித்ஷா சமரசம்?
ஆனால், பாமக இப்படி பிரிந்து கிடப்பது, பாஜகவுக்கு கவலையை தந்துள்ளதாம்.. இதற்கு தீர்வு என்ன செய்வதென்று தெரியாமல் பாஜக உள்ளதாக தெரிகிறது. எனினும் இப்போதைக்கு பீகார் தேர்தலிலேயே அவர்களின் முழுகவனமும் உள்ளது.. வரும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு அமித்ஷாவின் கவனம் இந்த பக்கம் திரும்பும்..
ஏப்ரல் 11, கூட்டணி அறிவிப்புக்கு முன்பு குருமூர்த்தி வீட்டில்தான் 4 மணி நேரம் அமித்ஷா இருந்தார்.. பாமகவை சமரசம் செய்ய குருமூர்த்தியையே அமித்ஷாதான் அனுப்பி வைத்தார்.. ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை.. ஒருவேளை இனியும் தங்கள் பேச்சை கேட்காவிட்டால், 2 பாமகவையும் பாஜக கை கழுவவும் வாய்ப்புள்ளது..
வன்னியர் சமூக குலசாமி - ஹீரோ
ஆனால், ராமதாஸை யாரும் தொந்தரவு செய்ய முடியாது.. பாமக என்ற கட்சி அன்புமணியிடம் இருக்கலாம், ஆனால், வன்னியர் சங்கம் ராமதாஸிடம்தான் உள்ளது.. அந்த சமூகத்தில் உள்ள நடுத்தர மற்றும் வயது மூத்தவர்களுக்கு குலசாமி ராமதாஸ்தான்.. வன்னியர் சமூகத்துக்கு ஒரு ஹீரோவாக உள்ளார்.. எனவே மற்றவர்களை உருட்டி மிரட்டி இணைப்பது போல, ராமதாஸை அன்புமணியுடன் பாஜகவால் சேர்த்து வைக்க முடியாது
எப்படியும் ஒரு சமரச முயற்சியை பாஜக இனி மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், ஆனால் அதற்கு 99.9 சதவீதம் ராமதாஸ் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.. இது பாஜகவுக்கும் தெரியும் என்றாலும், சமரச முயற்சியை பாஜக எடுக்கவில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது.. இதற்காகவே ஒருமுறை சமரச முயற்சி நடக்கலாம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications