நேராக மோத ரெடி.. பாஜகவிற்கு 14 தொகுதியில் செக் வைத்த ஸ்டாலின்.. போகிற இடமெல்லாம் "கேட்" போடும் திமுக
சென்னை: பாஜக கட்சி போட்டியிடும் 20 தொகுதிகளில் 14 தொகுதிகளை தேடிப்பிடித்து திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது.. பாஜகவிற்கு இது பெரிய சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
திமுக சார்பாக அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவது தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனி மெஜாரிட்டி பெறும் எண்ணத்தில் திமுக இத்தனை இடங்களை தேர்வு செய்துள்ளது. திமுகவின் உதயசூரியன் சின்னம் இந்த தேர்தலில் 187 இடங்களில் போட்டியிட உள்ளது.

கூட்டணி
திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்காமல் மிகவும் கறாராக செயல்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக சார்பாக 25 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகள் எதற்கும் திமுகவில் 6 இடங்களுக்கு மேல் கொடுக்கப்படவில்லை. அதிமுகவில் பாஜகவிற்கு வெறும் 20 இடங்களும், பாமகவிற்கு 23 இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜக திட்டம்
தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று சட்டசபைக்குள் அதிக அளவு எம்எல்ஏக்களை அனுப்பிவிட வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக இருக்கிறது. இதனால்தான் 20 தொகுதிகள் கிடைத்தாலும் அதில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்று பாஜக உறுதியாக இருக்கிறது. அதிமுகவின் கூட்டணியை பயன்படுத்தி தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம்.

ஆனால்
ஆனால் பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பாஜக போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளை திமுக குறி வைத்துள்ளது. பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் பின் வரும் 14 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது.
- விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (திமுக)
- திருவண்ணாமலை - எவ. வேலு (திமுக)
- நாகர்கோவில் - சுரேஷ்ராஜன் (திமுக)
- மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக)
- ராமநாதபுரம் - கா.காதர்பாட்சா (எ)
- முத்துராமலிங்கம் (திமுக)
- அரவக்குறிச்சி - இளங்கோ (திமுக)
- துறைமுகம் - பி.கே.சேகர் பாபு (திமுக)
- திருநெல்வேலி - லட்சுமணன்(திமுக)
- தாராபுரம் (தனி) - கயல் விழி செல்வராஜ் (திமுக)
- மதுரை வடக்கு - தளபதி (திமுக
- ஆயிரம் விளக்கு - எழிலன் (திமுக)
- திருக்கோயிலூர் - பொன்முடி (திமுக)
- திட்டக்குடி (தனி) - சி.வி.கணேசன் (திமுக)
- திருவையாறு - துரை சந்திரசேகரன் (திமுக)

திமுக திட்டம்
பாஜகவிற்கு செக் வைக்கும் வகையில் திமுக இந்த 14 தொகுதிகளை தனக்காக ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு இந்த இடங்களை ஒதுக்கினால் கூட பாஜக அங்கு வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. அதற்கு எல்லாம் வாய்ப்பே கொடுக்காத வகையில் தற்போது திமுக பெரும்பாலான இடங்களில் போட்டியிட களமிறங்கி உள்ளது.

முக்கியம்
அதிலும் திமுக சார்பாக திருவண்ணாமலை - எவ. வேலு (திமுக), அரவக்குறிச்சி - இளங்கோ (திமுக), துறைமுகம் - பி.கே.சேகர் பாபு (திமுக, மதுரை வடக்கு - தளபதி (திமுக), ஆயிரம் விளக்கு - எழிலன் (திமுக) , திருக்கோயிலூர் - பொன்முடி (திமுக), திருவையாறு - துரை சந்திரசேகரன் (திமுக) என்று திமுகவின் முக்கிய புள்ளிகள் பார்த்து பார்த்து பாஜகவிற்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளனர்.

கஷ்டம்
திமுக இப்படி மொத்தமாக களமிறங்குவதால் பாஜகவிற்கு இது கண்டிப்பாக மிக கடுமையான போட்டியாக இருக்க போகிறது. பாஜக தனது வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். இது போக பாஜக போட்டியிடும் குளச்சல், விளவங்கோடு, கோவை தெற்கு, உதகமண்டலம், காரைக்குடி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications