சீமானுக்கு சிக்கல்.. வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு போன திமுக புள்ளி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களுடன், திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் மருது கணேஷ் தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார். நேற்று கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சீமான், தந்தை பெரியார் குறித்துப் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சீமான் Vs பெரியார் ஆதரவாளர்கள் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

seeman periyar chennai dmk

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் உள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக திமுக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் மருது கணேஷ் புகார் அளித்துள்ளார். பெரியார் குறித்து பொய்யான தகவலை கூறிய சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெரியார் குறித்து சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சீமான் மீது திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமான் மீது போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், அவர் வழக்கு பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சீமான், புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதும் பெரியார் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசி இருந்தார் சீமான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+