கள்ளக்குறிச்சி விஷயத்தில்.. தவெக எம்எல்ஏவுக்கு எதிராக ஒன்று சேர்ந்த திமுக, அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விஷயத்தில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது ஏற்கெனவே அதிமுக புகார் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது திமுகவும் புகார் கொடுத்திருக்கிறது.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விஷயத்தில், எம்எல்ஏ அருள் விக்னேஷின் பெயர் அடிபட்டிருக்கிறது. தவெக இதனை மறுத்தாலும், அதன் கூட்டணி கட்சிகளே இந்த விஷயத்தில் எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரியிருக்கின்றன.

Kallakurichi Collector

என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவாக இருக்கும் அருள் விக்னேஷ், அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக ஆட்சியருக்கு தனி பாதுகாவலர் நியமிக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளருக்கு புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது ரொம்பவே சீரியஸான விஷயம், இதிலிருந்து தப்பிக்கவே முடியாது என அதிமுக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக அதிமுக எம்பி இன்பதுரை, "கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கில் சட்டம் தெளிவாக உள்ளது! BNS 75(1)(iv), 75(3)-ன் கீழ் பாலியல் சாயலுடைய கருத்துகளைத் தெரிவிப்பது பாலியல் துன்புறுத்தல் குற்றம். BNSS 359-ன் கீழ் இக்குற்றத்தைச் சமரசம் செய்ய முடியாது. பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரே விரும்பினாலும், தலைமைச் செயலாளரிடம் அவர் அளித்துள்ளதாகக் கூறப்படும் புகாரைத் திரும்பப் பெற்றாலும், குற்றவியல் வழக்கு முடிவுக்கு வந்துவிடாது. சட்டம் என்பது தனிநபரின் விருப்பத்திற்கு உட்பட்டதல்ல!" என கூறியிருந்தார்.

மறுபுறம் தவெகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிலிருந்தும் எம்எல்ஏவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. எம்பி ஜோதிமணி இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தவெக ஆட்சியமைக்க உதவிய இடதுசாரிகளும், உரிய விசாரணை நடத்தி.. எம்எல்ஏ மீது நடவடிக்கை இருப்பின் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இப்படி இருக்கையில், இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே அதிமுக புகார் அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் மனு கொடுத்திருக்கிறார். எம்எல்ஏ மீது FIR பதிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே தவெக அரசு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. துணை சபாநாயகர் ரவிசங்கர், பொதுமக்களை தாக்கியதாக குற்றச்சாட்டு, புதிய தலைமை செயலகத்திற்கு எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை என.. திரும்பும் பக்கம் எல்லாம் பஞ்சாயத்துகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்.. எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு கிளம்பியிருப்பது முதலமைச்சர் விஜய்யை ரொம்பவே டென்ஷனாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+