திமுக ஃபைல்ல் 2.. இரும்பு பெட்டியில் புகார் கொடுத்த அண்ணாமலை.. ரூ.5600 கோடி ஊழல் வீடியோ ரிலீஸ்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, இரும்புப்பெட்டியில் வைத்து திமுக அரசுக்கு எதிரான ஊழல் புகார் குறித்த மனுக்களை அளித்துள்ளார். ரூ. 5600 கோடி மதிப்பிலான 3 முறைகேடுகள் குறித்து திமுக ஃபைல்ஸ் 2 பற்றிய வீடியோவையும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பைல்ஸ் என்கிற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவினர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த பாதயாத்திரை செல்ல இருக்கிறார் அண்ணாமலை. வரும் 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைக்கவுள்ளார். நடைபயணத்திற்கு முன்னதாக திமுகவினரின் இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அவர் சொன்னது போலவே இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முறைகேடு புகார்களை அளித்தார் அண்ணாமலை. திமுக அரசின் செயல்பாடுகள், அமைச்சர்களின் சொத்து பட்டியல்கள் அடங்கிய மனுக்களை இரும்பு பெட்டியில் வைத்து ஆளுநரிடம் கொடுத்துள்ளார் அண்ணாமலை. ஆளுநரை சந்தித்த பிறகு அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் மூத்த தலைவர்களுடன் சேர்ந்து, தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திமுக அமைச்சர்கள்/எம்எல்ஏக்கள்/எம்பிகள் மற்றும் முதல் குடும்பம் மற்றும் ரூ. 5600 கோடி மதிப்பிலான 3 முறைகேடுகள் தொடர்பான பினாமி ஆவணங்களுடன் திமுக ஃபைல்ஸ் 2 குறித்து ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கையை கோரி மெமோராண்டம் ஒன்றை சமர்பித்தோம் என்றும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#DMKFiles2
— K.Annamalai (@annamalai_k) July 26, 2023
1. 3000 Crore Scam – ETL Infrastructure Services Limited
2. 2000 Crore Scam in Transport Department
3. 600 Crore Scam in TNMSC
We will elaborate more on this during our Padayatra to our friends in Press & Media.
We demand answers from the corrupt DMK… pic.twitter.com/IM7zvGjrOu
இதே போல அண்ணாமலை தனது மற்றொரு ட்வீட்டில் ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிடெட் 3000 கோடி ஊழல், போக்குவரத்து துறையில் ரூ. 2000 கோடி ஊழல், டாஸ்மாக்கில் ரூ. 600 கோடி ஊழல் என பதிவிட்டுள்ளார். பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு எங்கள் பாதயாத்திரையின் போது இதைப் பற்றி மேலும் விரிவாகக் கூறுவோம். திமுக அரசிடம் பதில் கேட்கிறோம் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. இது தொடர்பான வீடியோ ஒன்றிணையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. இந்த வீடியோவும் அண்ணாமலை கூறியுள்ள புகாரும் தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு அதிர்வலைகளை உருவாக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications