இரண்டிலும் அவுட்.. ஆனாலும் ‘கெத்தாக’ நிற்கும் திமுக.. கூட்டணி கட்சிகளே இல்லாமல் சேம் பெர்ஃபாமன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த இடைத்தேர்தலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது திமுக. 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும், கூட்டணிக் கட்சிகள் இன்றி தனது வாக்கு பலத்தைத் தக்க வைத்துள்ளது திமுக. இது அக்கட்சிக்கு ஆறுதலாகப் பார்க்கப்படுகிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுகன்யா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கடந்த முறை தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

Dharapuram

தாராபுரம் தொகுதியின் வாக்கு முன்னிலை நிலவரம் ஆரம்பத்திலிருந்தே சுவாரஸ்யமாக இருந்தது. முதலில் தவெக முன்னிலை, பின்னர் அதிமுக முன்னிலை எனப் போக்குக் காட்டியது. 4 சுற்றுகள் வரை அதிமுக முன்னில வகித்து வந்த நிலையில், 5வது சுற்றில் தவெக 'லீட்' எடுத்தது. பின்னர் திமுக இரண்டாம் இடத்துக்கு முந்தியது. திருப்பங்கள் பல கடந்து தாராபுரத்தை வசப்படுத்தியது தவெக.

தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகள் நிறைவில்

தவெக - சத்யபாமா: 66,841 வாக்குகள்

திமுக - சுகன்யா: 57,370

அதிமுக - பானுமதி: 45,280

நாதக - கார்த்திகா - 5,268

இந்திய கம்யூனிஸ்ட் - ப.லட்சுமணன் - 1,157

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் தவெக 46,438 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இப்போது 66,841 வாக்குகள் பெற்றுள்ளது.

மதுராந்தகத்தில் 27 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். திமுக இரண்டாவது இடமும் அதிமுக மூன்றாவது இடமும் பிடித்துள்ளன.

மதுராந்தகத்தில் 27 சுற்றுகள் முடிவில்

மரகதம் குமரவேல் (தவெக) - 74,048

பரந்தாமன் (திமுக) - 54,008

கணிதா சம்பத் (அதிமுக) - 47,450

ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி) - 2,709

சுகந்தி (மார்க்சிஸ்ட்) - 1,986

திமுகவுக்கு ஆறுதல்?

கடந்த முறை, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐ.யூ.எம்.எல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ள்ளடக்கிய கூட்டணி ஆதரவுடன் களமிறங்கி மதுராந்தகத்தில் 3ஆம் இடம் பிடித்திருந்தது திமுக. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெக பக்கம் தாவிய நிலையிலும், தற்போது இடைத்தேர்தலில் 2ஆம் இடம் பிடித்துள்ளது திமுக.

அதேபோல, தாராபுரம் ஏற்கனவே அதிமுக வென்ற தொகுதி. இந்த முறை ஆளுங்கட்சியான தவெக தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டதால், திமுக சோபிக்குமாஅ என்ற சந்தேஅம் இருந்தது. எனினும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது திமுக.

அதாவது, கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐ.யூ.எம்.எல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாமலேயே, கடும் போட்டியைக் கொடுத்து 2ஆம் இடம் பிடித்துள்ளது திமுக.

வாக்கு சதவீதத்தை தக்கவைத்த திமுக

அதேசமயம், வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பொதுத் தேர்தலில் மதுராந்தகத்தில் திமுக 59,838 வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது அது 54,008 ஆக குறைந்துள்ளது. அதாவது, சுமார் 5,800 வாக்குகள் குறைந்துள்ளன. எனினும், வாக்கு சதவீதத்தில் 1% முன்னேறியுள்ளது திமுக.

அதேபோல, பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் திமுக 64,373 வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது அது 57,370 ஆக குறைந்துள்ளது. அதாவது, சுமார் 7.000 வாக்குகள் குறைந்துள்ளன. வாக்கு சதவீதத்தில் 0.5% அளவுக்கு மட்டுமே சரிந்துள்ளது திமுக.

திமுக பெற்ற வாக்கு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், வாக்கு சதவீதத்தில் பெரிய சரிவு இல்லை. அதுமட்டுமல்லாமல், கூட்டணியில் கட்சிகள் இன்றி தனியாக தனது பலத்தை நிரூபணம் செய்துள்ளது திமுக. எனவே, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஆறுதல் தான் என்கிறார்கள் அக்கட்சியினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+