75% ஒப்பந்தம் திமுக அரசின் திட்டங்கள்.. முதலீட்டாளர் மாநாட்டில் வெளிப்படைதன்மை இல்லை.. டிஆர்பி ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தலைமையில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாடில் 97 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த 97 ஒப்பந்தங்களில் 70 ஒப்பந்தங்கள் முந்தைய திமுக ஆட்சியில் போடப்பட்டவை என்று முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். மேலும், 97 முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை எனவும், ஊடகங்களை அனுமதிக்காததற்கு கண்டனமும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை நெருங்கும் நிலையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. 'வெற்றி தமிழ்நாடு' எனப்படும் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

TRB Rajaa

டிஆர்பி ராஜா கேள்வி

முதல்வர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு' முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக இதனை பெரும் சாதானையாக கொண்டாடி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஒப்பந்தம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. குறிப்பாக இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பலரும் கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில், முன்னாள் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, 97 ஒப்பந்தங்களில் 70 ஒப்பந்தங்கள் முந்தைய திமுக ஆட்சியில் போடப்பட்டவை.. 97 ஒப்பந்தங்கள் குறித்து வெளிப்படைத் தன்மை வேண்டும் என கூறியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:-

திமுக ஆட்சியில் கொண்டு வந்தது

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடுமையான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. திமுக ஆட்சியின் முயற்சியால் வந்த முதலீடுகள் என ஊடகத்தினர் கண்டுபிடிக்கக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டுள்ளதா? 97 புரிந்துணர்வு ஒப்பதங்கள் இன்னும் ஏன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இன்று ஒப்பந்தம் செய்யப்பட்ட முதலீடுகளில் 75 சதவீதம் வரை திமுக ஆட்சியில் வைத்து இருந்த திட்டங்கள்தான்.

நமது மாநிலத்தில் உருவாகும் ஒவ்வொரு முதலீடும், ஒவ்வொரு தொழிற்சாலையும் அதன் மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும் சரி அது மகிழ்ச்சியையே எங்களுக்கு தரும். திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டியிருந்தாலும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல என்பதை திமுக மதித்து வந்துள்ளது.

நிறுவனங்கள் பட்டியலை வெளியிடனும்

இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை பத்திரிகைகளுக்கு வெளியிட வேண்டும். அவர்கள் அதை ஆய்வு செய்யட்டும். எது உண்மையிலேயே புதிய முதலீடு, எது நிறுவனங்களின் விரிவாக்கம், எது ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட திட்டம் என்பதை மக்கள் அறியட்டும். விளம்பரங்களில் கூறப்படுவது போல் இந்த எண்ணிக்கைகள் உண்மையாகவே இருந்தால், வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டால் அந்த சாதனையை மேலும் வலுப்படுத்தவே செய்யும்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+