திமுகவிலிருந்து நீக்கப்பட்ட.. ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்
சென்னை: ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் என்று இணைந்தார்.
கமலாலயத்தில், திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க இணைந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம், திமுகவுக்கு எதிராக கலகத்தை ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். ஆனால் அவர் கட்சி மாறவில்லை. கட்சி தாவல் தடைச் சட்டத்தை மனதில் வைத்துதான் செல்வம் அடக்கி வாசிப்பதாக அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில், கு. க. செல்வத்தை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக முக. ஸ்டாலின் அறிவித்தார். இருப்பினும் செல்வம் பாஜகவில் சேராமல்தான் இருந்து வந்தார்.

இந்நிலையில்தான் இன்று கு.க.செல்வம், பாஜகவில் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications
