கட்சியில் மாற்றப்படும் விதிகள்.. உள்ளாட்சி தேர்தலுக்கு அதிரடியாக தயாராகும் திமுக.. ஸ்டாலின் பிளான்

திமுக பொதுக்குழு கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உள்ளாட்சி தேர்தலுக்கு அதிரடியாக தயாராகும் திமுக

    சென்னை: அடுத்த வாரம் நடக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்க உள்ளனர்.

    திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இரண்டு முக்கியமான விஷயங்களை மையங்களை வைத்து இந்த கூட்டம் நடக்க உள்ளது.

    திமுக பொதுக்குழு

    திமுக பொதுக்குழு

    இந்த திமுக பொதுக்கூட்டத்தில் கட்சியின் முக்கியமான விதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே அதுதான் என்று திமுக தரப்பு தெரிவிக்கிறது. கழக விதியில் முக்கிய திருத்தம் கொண்டு வரப்படும். புதிய பதவிகள் உருவாக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    புதிய பதவிகள்

    புதிய பதவிகள்

    அதன்படி திமுகவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுச்செயலாளர் பதவிகள் மற்றும் பொருளாளர் பதவிகள் உருவாக்கப்படும் என்று கூறுகிறார்கள். திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது, செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதேபோல் இந்த முறை பொதுச்செயலாளருக்கு பதிலாக புது பதவிகள் உருவாக்கப்படலாம் என்கிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    மிக முக்கியமாக உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் புதிய பதவியோ அல்லது பொறுப்போ வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த திமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சு மிக முக்கியமானதாக இருக்க போகிறது என்றும் கூறுகிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. கட்சியின் விதிகளையும் கூட தேர்தலை கருத்தில் கொண்டுதான் மாற்றுகிறார்கள். முடிவுகளை மூத்த உறுப்பினர்களும் எடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இருக்க கூடாது

    இருக்க கூடாது

    உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக வென்றாக வேண்டும். லோக்சபா தேர்தல் போல முடிவுகள் இருக்க வேண்டும். 2 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் போல தோல்வி அடைய கூடாது. இன்னொருமுறை அலட்சியமாக இருந்துவிட கூடாது என்று திமுக முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+