அன்பழகன் சம்பாதித்தது மதிப்பும்.. மரியாதையும் மட்டும்தான்.. பேரிழப்பு.. ரஜினிகாந்த் நேரில் இரங்கல்!
சென்னை: திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
தமிழக அரசியலில் மிக முக்கியமான தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க. அன்பழகன் இன்று அதிகாலையில் காலமானார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

நேற்று மாலையில் இருந்து அவரின் உடல் அவசர சிகிச்சையை ஏற்க மறுத்த நிலையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகனின் மறைவையொட்டி பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அன்பழகன் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வரிசையாக முக்கிய அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலஒயில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரின் குடும்பத்தினரிடம் தன்னுடைய இரங்கலை தெரிவித்து, அன்பழகன் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தவர், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு பெரிய இழப்பு. அவரின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும், என்னுடைய நண்பர் தளபதிக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

60 ஆண்டுகால அரசியலில் அன்பழகன் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும்தான் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications