திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலம் பெற வேண்டும்.. ராமதாஸ் டுவிட்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல் நலம்பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வயது 97. இவர் 1977 முதல் திமுக-வின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

திமுகவில் கட்சியில் பதவியில் யாரை வைப்பது நீக்குவது, நியமிப்பது என்பது கருணாநிதியின் ஆலோசனைப்படி அதன் அதிகாரம் எல்லாமே பேராசிரியர் அன்பழகனிடம் தான் இருந்து வருகிறது. இதற்கு காரணம் கருணாநிதி மற்றும் அன்பழகன் இடையிலான ஆழமான நட்பு. கருணாநிதி மறைவுக்கு பின்னர் வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் பிரச்னையால், கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல் நலம்பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 28, 2020
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், புதன் கிழமை இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது . அன்பழகனின் உடல்நலம் குறித்து நேரடியாக சென்று கண்காணித்து திமுக தலைவர் மு கஸ்டாலின் விசாரித்து வருகிறார். அத்துடன் ஸ்டாலின் தனது பிறந்த நாள் கொண்டாடத்தை தவிர்த்துள்ளார். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பேராசிரியர் க,அன்பழகன் மீண்டும் உடல்நலம் தேறி வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பேராசிரியர் க.அன்பழகன் மீண்டும் உடல் நலம் பெற்று தேறி வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல் நலம்பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications