தமிழகத்தில் சறுக்கும் திமுக கூட்டணி! அதிமுகவை விட அதிக இடங்களை அள்ளும் பாஜக.. NEWS X கருத்து கணிப்பு
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் அதிக இடங்களில் வெல்லும். ஆனால் கடந்த 2019 தேர்தலை விட திமுக கூட்டணிக்கு குறைவான இடங்கள் கிடைக்கும் என NEWS x செய்தி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தில் கடந்த தேர்தலை விட அதிமுக அதிக இடங்களில் வென்றாலும் கூட பாஜகவை விட வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கையில் பின்தங்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தற்போது வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலையொட்டி நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் கடைசி நேர தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் தேர்தல் தொடர்பான பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம் டி டைனாமிக்ஸ் (News x - D Dynamics) அமைப்புடன் சேர்ந்து நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதன்படி தமிழ்நாட்டில் அதிக இடங்களில் திமுக தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த முறையை காட்டிலும் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக கூட்டணி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளையில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாத நிலையில் இந்த முறை அதிமுகவை விட அதிக இடங்களை கைப்பற்றும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும்போது அதிமுக கூடுதல் இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 22 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக 21 இடங்களிலும், திமுக கூட்டணியில் உள்ள கொமதேக கட்சி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறது. அந்த வகையில் இந்த இடங்களில் எல்லாம் திமுக வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 இடங்களில் வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது பாஜக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழதக்தில் பாஜக 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தேனியில் மட்டும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மகன் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். தற்போது அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அதிமுக 3 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவை ஒப்பிடும்போது ஒரு இடம் குறைவாகும்.
இதுதவிர மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மற்றவர்கள் என்பது எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. இது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications