திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்!
சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரன் இன்று திமுகவில் இணைந்துள்ளார். முன்பு திமுகவில் இருந்து வந்த அவர், மதிமுகவுக்குச் சென்று பின்னர் திமுகவுக்கு திரும்பினார். அதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுகவுக்குச் சென்றார். 12 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் திமுகவுக்கு வந்துள்ளார்.
திமுக-வில் 22 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட செயலாளராக இருந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். "கலைஞரின் தரைப்படை தளபதி" என திமுகவினரால் கொண்டாடப்பட்ட செஞ்சி ராமச்சந்திரன் திமுக-விலிருந்து வைகோ விலகிய போது அவரோடு சேர்ந்து மதிமுகவில் ஐக்கியமானார்.

பின்னர் திமுக உடன் மதிமுக கூட்டணி அமைத்துப் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது வெற்றி பெற்ற செஞ்சி ராமச்சந்திரன் மத்திய இணை அமைச்சரானார். அதன் பிறகு, வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் செஞ்சி ராமச்சந்திரன் தாய்க் கழகமான திமுகவுக்கே திரும்பினார்.
எனினும், திமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், ஜெயலலிதா அழைப்பின் பேரில் செஞ்சி ராமச்சந்திரன், அதிமுக-வில் இணைந்தார். அதிமுகவில் அமைப்புச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. எனினும், முன்பு போல அரசியல் களத்தில் அவரால் கோலோச்ச முடியவில்லை.
விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தபோது, செஞ்சி ராமச்சந்திரன் அக்கட்சியில் இணைந்து அவைத் தலைவர் ஆகப்போவதாக தகவல்கள் உலவி வந்தன. எனினும், செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணையவில்லை. அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் தவெகவுக்குச் சென்றபோதும், செஞ்சி ராமச்சந்திரன் அக்கட்சிக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், இன்று திமுகவில் இணைந்துள்ளார் செஞ்சி ராமச்சந்திரன். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில் விழுப்புரத்தில் இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன். அவருடன் முன்னாள் அதிமுக திருக்கோவிலூர் நகர செயலாளர் ஏ.வி.எம்.விநாயகமூர்த்தியும் திமுகவில் இணைந்தார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications