நம்பரை பிடிங்க.. போனை அடிங்க.. சரியாக தேர்தல் நாளில் நிர்வாகிகளுக்கு போன திமுக ஆர்டர்.. என்னாச்சு?
சென்னை: லோக்சபா தேர்தல் 2024 இன்று நடக்கும் நிலையில் திமுக நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று கட்சி சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலோடு எல்லா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

திமுக உத்தரவு; இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தல் 2024 இன்று நடக்கும் நிலையில் திமுக நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை கட்சி சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்று வாக்குப்பதிவின் போது ஏதேனும் புகார் தெரிவிக்க அவசியமிருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்று பின்வரும் எங்களை வெளியிட்டு உள்ளனர்.
அறிவாலயம் வார் ரூம் :
பொதுவான எண்: 08069446900
சென்னை மண்டலம் : 08069446901
வடக்கு மண்டலம் : 08069446902
மேற்கு மண்டலம் : 08069446903
டெல்டா மண்டலம் : 08069446904
தெற்கு மண்டலம்: 08069446905
திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி நிர்வாகிகள், பொதுமக்களும் இதை பயன்படுத்தி புகார் அளிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாம். தேர்தல் நேரத்தில் முறைகேடு எதுவும் நடக்க கூடாது என்பதால் திமுக சார்பாக இந்த திட்டம் களமிறக்கப்பட்டு உள்ளதாம்.
விளம்பரம்; தமிழ்நாட்டில் சரியாக லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் பாஜகவிற்கு எதிராக திமுக தீவிரமான விளம்பரங்களை இன்று வெளியான பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்கத்தில் கொடுத்துள்ளது.
வாக்குகளால் விரட்டி அடிப்போம் என்ற தலைப்பில் இந்த விளம்பரங்களை திமுக வெளியிட்டு உள்ளது.
ஒற்றைச் செங்கலாக நிற்கும் மருத்துவமனை
புதிய வரியால் முடங்கிய கோவை, சிவகாசி, திருப்பூர் மற்றும் ஓசூர் போன்ற தொழில் நகரங்கள்
உயர்ந்து கொண்டே இருக்கும் சுங்கச்சாவடி கட்டணங்கள்
மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க மற்றொரு தேர்வுச் சுமை
இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 534 படகுகள் பறிமுதல்
சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வராத நிவாரண நிதி
2014 இல் ரூ.440-க்கு விற்ற சமையல் சிலிண்டர் இன்று ரூ.818
பெட்ரோல் விலை
2014 5.66.37
2024 .100.75
டீசல் விலை
2014 . 53.38 2024 . 92.44
2024 . 92.44
மீட்கப்படாத கருப்பு பணம்; வங்கி கணக்கில் வராத பணம்
நாட்டில் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 42% பேருக்கு வேலை இல்லை
என்று பாஜகவை விமர்சனம் செய்யும் பாயிண்டுகளை குறிப்பிட்டு பாஜக விளம்பரம் செய்துள்ளது. அதேபோல் அதிமுக + பாஜக இடையில் மறைமுக கூட்டணி இருக்கிறது என்றும் விமர்சனம் செய்து திமுக இன்னொரு விளம்பரத்தை வெளியிட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் சரியாக லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் பாஜகவிற்கு எதிராக திமுக தீவிரமான விளம்பரங்களை இன்று வெளியான பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்கத்தில் கொடுத்துள்ளது. முன்னதாக கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக இதேபோல் விளம்பரம் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications