சின்ன தோசை தந்த திமுக.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே
சென்னை: தமிழக தேர்தல் களம் அதன் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை திமுக கூட்டணியில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியுள்ளது.. அதுகுறித்த பிரத்யேக செய்தி நமக்கு இப்போது கிடைத்துள்ளது. இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ராகுல் காந்தி தமிழக பிரச்சாரத்திற்கு தேதி ஒதுக்காமல் இழுத்தடித்து வரும் நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி இப்போது ஒரு புதுப் பிரச்சனையைத் தட்டி விட்டுள்ளார்..

தொகுதிப் பங்கீடுகள் அனைத்தும் முறைப்படி பேசி முடிக்கப்பட்டு, வேட்பாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி வாக்கு சேகரித்து கொண்டிருக்கும் இந்த இறுதிக்கட்டத்தில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
ராகுல் காந்தி அப்செட்
அதுவும், கூட்டணி தர்மம் மற்றும் தொகுதிப் பங்கீடு போன்ற விவகாரங்கள் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் இந்தக் கருத்து அரசியல் முதிர்ச்சியற்ற செயலாக திமுகவினரால் பார்க்கப்படுகிறது.. இருந்தாலும், அந்த அறிக்கையில் ஒளிந்துள்ள அர்த்தங்கள் மிக ஆழமானவை..
காங்கிரஸ் கட்சியை அனுமாரோடு ஒப்பிட்டுப் பேசியுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸார் தங்களின் சுய பலத்தை உணராமல் இருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்
பிரவீன் காந்தி அறிக்கை
அந்த அறிக்கையில் காங்கிரஸை அனுமாரோடு ஒப்பிட்டும் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.. "நாங்கள் அனுமார் மாதிரி, எங்களுடைய பலம் எங்களுக்கே சரியாகத் தெரியாது" என்று தொடங்கிய அவர், திமுக கூட்டணியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக கூட்டணியில் நாங்கள் கூடுதல் இடங்களைப் பெறப் பல முயற்சிகளைச் செய்தோம், ஆனால் எங்களுக்கு ஒரு சின்ன தோசையைக் கொடுத்துவிட்டு அதையே எல்லாரும் பங்கு போட்டுச் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் என அவர் ஆவேசமாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.. இந்தக் கருத்து திமுக மேலிடத்தைத் தலைவலிக்க வைத்துள்ளதாம்.
ஒரு பக்கம் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி எனப் பேசிக் கொண்டே, இன்னொரு பக்கம் "எங்களுக்குக் கல்யாண விருந்து வைக்க கூப்பிடுகிறார்கள்" என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியிருப்பதுதான் இப்போது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது..
சின்ன தோசை தந்த திமுக
இது வேறொரு கட்சிக்கு காங்கிரஸ் தாவப் போகிறதா அல்லது வேறு ஏதேனும் ரகசியத் திட்டமா என்ற சந்தேகத்தை அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் எழுப்பி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு போன்ற முக்கிய விவரங்கள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டுத் தேர்தல் நெருங்கும் இந்தச் சூழலில், பிரவீன் சக்கரவர்த்தியின் இந்தத் தறுதலை அறிக்கை திமுக தொண்டர்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் மேலிடம் உண்மையில் தமிழகத் தேர்தல் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது புரியாமல் திமுகவினர் திகைத்துப் போய் நிற்கிறார்களாம்.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது தேர்தல் களத்தில் திமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்று அறிவாலயம் கருதுகிறதாம்.
ராகுல் காந்தி வராததற்கு இத்தகைய உட்கட்சிப் பூசல்களே காரணம் என்ற பேச்சும் எழத்தொடங்கியுள்ளது.. காங்கிரஸ் மேலிடம் தமிழகத் தேர்தலை ஒரு பெரிய கடமையாகக் கருதாமல் வெறும் சடங்காகப் பார்க்கிறதோ என்ற ஐயப்பாடு உடன்பிறப்புகள் மத்தியில் மேலோங்கி வரும்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த ஆவேசப் பேச்சு தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வாக்கு எண்ணிக்கை அன்றே தெரியவரும்..!!
- சிறப்பு நிருபர்
-
கோவை ஸ்டார் ஓட்டலில் காஸ்ட்லி விருந்து.. செந்தில் பாலாஜியை வீழ்த்த வேலுமணி வீசிய பவர்ஃபுல் ஸ்ட்ரோக் -
சின்னம்மா வர்றாங்க போகாதீங்க! திமுகவுக்கு "திமிங்கலம்" சிக்குதா? சசிகலாவுக்கு சொந்த கட்சியிலேயே அடி? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
பாஜகவையே "டம்மி" ஆக்கிய எடப்பாடி? 27 இடங்களிலும் திமுகவுக்கு கோல்டன் சான்ஸ்! அப்பாவுக்கு "அப்பாடா" -
ஆடு 1000.. எருமை 55,000, மனுஷன் விலை இவ்வளவுதானா? சீமான் வெளியிட்ட அதிர்ச்சி கணக்கு! #Election2026 -
21 தொகுதிகளில் உதயசூரியனும் இல்லை.. இரட்டை இலையும் இல்லை.. தட்டி தூக்குகிறார்களா விஜய், சீமான்? -
22 சவரன் தங்க நகை, 8 மோதிரம்.. வாக்கு கேட்டு வந்த கோவை ரியல் எஸ்டேட் "பிசினஸ்மேன்".. திகைத்த மக்கள் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம்












Click it and Unblock the Notifications