ஆஸ்திரேலியா ரிட்டர்ன்! ஐடி இன்ஜினியர்! எளிமையான பின்னணி! இவர்கள்தான் திமுக மேயர் வேட்பாளர்கள்! சபாஷ்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. நாளை மறைமுக தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த பட்டியல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது. இதில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்கிறது. அதாவது மேயர், துணை மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இந்த மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 முக்கியமான மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 21 மேயர்களில் 11 பேர் பெண்கள், 10 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மேயர்
சென்னை மேயராக பிரியா 28 வயதே ஆகிறார். இவர் எம் காம் படித்தவர். பாரம்பரியமாக திமுக குடும்ப பின்னணியை சேர்ந்தவர். முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் மகள்தான் ப்ரியா. இன்னொரு பக்கம் மதுரை மேயராகும் இந்திராணி B.A., M.L.I.S. படித்தவர். திருப்பூர் மேயராக தினேஷ் ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டம் பயின்றவர். 1998ல் இந்திய ஜப்பான் கூட்டு இளம் தலைவர்கள் கருத்தரங்கில் இந்தியாவிலிருதந்து இளம் மாணவர் தலைவராக பங்கேற்றவர். 42 வயதான இளம் மேயராக திருப்பூரில் இவர் பதவி ஏற்க உள்ளார்.

திருப்பூர் மேயர்
அதேபோல் காஞ்சிபுரம் மேயராகும் மகாலட்சுமி யுவராஜ்36 வயதே ஆனவர். இவரும் முதுகலைப் பட்டம் பயின்றவர். இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணி செய்து கொண்டிருந்த இவர் ஐடி உலகில் நல்ல அனுபவம் கொண்டவர். அரசியல் மீது ஆர்வம் காரணமாக தன் பதவியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டவர்.

காஞ்சிபுரம் மேயர்
அதிக ஐடி நிறுவனங்கள் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ் வரும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு இவர் மேயர் ஆனது நல்ல தேர்வாக பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தாம்பரம் மேயர் ஆகும் வசந்தகுமாரி கமலக்கண்ணன் கெமிக்கல் பொறியியல் படித்தவர் ஆவார். திருச்சி மேயராக அன்பழகன் எம்ஏ படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலவையான தேர்வு
மேயர் தேர்வு முழுக்க முழுக்க கலவையாக செய்யப்பட்டள்ளது. திமுகவில் நீண்ட காலமாக இருக்கும் மகேஷ் போன்றவர்களுக்கு சென்னை துணை மேயர் பதவி, மூத்த நிர்வாகிகள் பலருக்கு மேயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இளம் உறுப்பினர்கள், புதியவர்களுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. உதாரணமாக சென்னைக்கு இளம் மேயர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சேலத்திற்கு இராமசந்திரன் என்று மூத்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எளிமையான மேயர்
தேர்தலுக்கு முன்பே இவருக்கு மேயர் பதவி வழங்கப்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இவர் 1944ஆம் ஆண்டு சேலம் மாநகர்மாவட்டத்தில் பிறந்தவர். தன் சிறுவயது முதலே இவருக்கு அரசியல் மீது ஒரு தனிப் பற்று இருந்து வந்தது. இந்த நிலையில் 1961 ஆம் ஆண்டு அண்ணாதுரை அவர்கள் காலகட்டத்தில் அண்ணா மீது இருந்த ஈர்ப்பின் மூலம் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கோவை மேயர்
அதேபோல் கோவை மாநகராட்சிக்கு எளிமையான பின்னணியை கொண்ட கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதுவரை இங்கு திமுக நேரடியாக மேயர் பதவியை பெற்றது இல்லை. கோவை மாநகராட்சி மேயர் பதவியை அலங்கரிக்கும் வாய்ப்பு வரலாற்றில் முதல்முறையாக திமுகவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகம் படித்தவர்கள், இளைஞர்கள், அரசியல் அனுபவம் கொண்டவர்கள், எளிமையான பின்னணியை கொண்டவர்கள் என்று கலவையாக திமுகவில் இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications