மயிலாப்பூரில் அசத்திய திமுக.. 2024 லோக்சபா தேர்தலில் சுவாரசியமே இதுதான்.. பாஜக ஷாக்.. இதை பாருங்கள்!
சென்னை; தென்சென்னையில் திமுக வெற்றிபெற்ற நிலையில் இங்கே சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்து உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் தென்சென்னை தொகுதி கொஞ்சம் போட்டி அதிகம் கொண்ட தொகுதி ஆகும். இது ஸ்டார் வேட்பாளர்கள் தொகுதியாக பார்க்கப்படுகிறது.

இங்கே அதிமுக சார்பாக ஜே. ஜெயவர்தன் என்று அழைக்கப்படும் ஜெயக்குமார் ஜெயவர்தன் களமிறக்கப்பட்டார். இவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஆவார். 2014 லோக்சபா தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சென்னை தெற்கு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், தொழில் ரீதியாக மருத்துவராக உள்ளார்.
டாக்டர் ஜே ஜெயவர்தன் 26 வயதில் தமிழ்நாட்டின் தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் இளைய எம்.பி என்று அப்போது பிரபலம் அடைந்தார். இதையடுத்து மீண்டும் இதே தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிட்டார் . கடந்த லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் அவர் 3,02,649 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியன் 564,872 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதே தொகுதியில் மீண்டும் தமிழச்சி தங்க பாண்டியன் திமுக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது வென்றுள்ளார். பாஜக சார்பாக இங்கே தமிழிசை சௌந்தரராஜன் இங்கே களமிறக்கப்பட்டார்.
2024 ரிசல்ட்: 516628 வாக்குகள் பெற்று திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியன் இங்கே வென்றார். பாஜக சார்பாக 290683 வாக்குகள் பெற்று தமிழிசை சௌந்தரராஜன் 225945 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஜெயவர்தன் 172491 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தென்சென்னையில் உள்ள சட்டசபை தொகுதி வாரியாக ரிசல்ட்;
விருகம்பாக்கம் திமுக பெற்ற வாக்குகள் 69040. திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 45.50%. பாஜக பெற்ற வாக்குகள் 43528. பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 28.70%. அதிமுக பெற்ற வாக்குகள் 22978. அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 15.10%.
சைதாப்பேட்டை திமுக பெற்ற வாக்குகள் 76977. திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 53.50% பாஜக பெற்ற வாக்குகள் 28643. பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 19.90%. அதிமுக பெற்ற வாக்குகள் 23125 . அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 16%
தி.நகர் திமுக பெற்ற வாக்குகள் 51090. திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 41%. பாஜக பெற்ற வாக்குகள் 45206. பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 36.30%. அதிமுக பெற்ற வாக்குகள் 17965. அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 14.40%
மயிலாப்பூர்: திமுக பெற்ற வாக்குகள் 64791. திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 46.70%. பாஜக பெற்ற வாக்குகள் 38944. பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 28%. அதிமுக பெற்ற வாக்குகள் 21263. அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 15.30%
வேளச்சேரி திமுக பெற்ற வாக்குகள் 76245. திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 45.20%. பாஜக பெற்ற வாக்குகள் 51353 . பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 30.40%. அதிமுக பெற்ற வாக்குகள் 23209. அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 13.70%
சோழிங்கநல்லூர் திமுக பெற்ற வாக்குகள் 177164. திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 47.90%. பாஜக பெற்ற வாக்குகள் 81555 . பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 22%. அதிமுக பெற்ற வாக்குகள் 63568 . அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 17.20%
சுவாரசியம்; தென்சென்னையில் திமுக வெற்றிபெற்ற நிலையில் இங்கே சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. இங்கே திமுகவிற்கு எதிரான களமாக பார்க்கப்படும் மயிலாப்பூரில் திமுக அதிக வாக்குகளை வென்றுள்ளது.
வேளச்சேரி போன்ற பாரம்பரிய திமுக இடங்களை விட மயிலாப்பூரில் திமுக வாக்குகளை வென்றுள்ளது. மயிலாப்பூர்: திமுக பெற்ற வாக்குகள் 64791. திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 46.70%. பாஜக பெற்ற வாக்குகள் 38944. பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 28%. அதிமுக பெற்ற வாக்குகள் 21263. அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 15.30%












Click it and Unblock the Notifications