1,222 இடங்களில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்! பயணப்படி -பணம்! திமுக சொற்பொழிவாளர்கள் உற்சாகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் 3 நாட்களாக நடைபெற்று வருவதால் அக்கட்சியின் சொற்பொழிவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இன்றைய கால கட்டத்தில் சமூக வலைதளப் பக்கங்கள், ஊடகங்கள், யூ டியூப் சேனல்கள் மூலம் அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு சேர்க்க முடியும் என்ற நிலையில், பேச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு வருமானம் கொடுக்கும் வண்ணம் 3 நாட்களுக்கு 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறது திமுக.

DMK government 2 year achievement briefing public meetings in 1,222 locations, DMK Orators excited

பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு திமுக தலைமைக்கழகத்தால் அறிவிக்கப்பட்ட பேச்சாளர்கள் செல்லும் போது, கூட்டத்தை ஏற்பாடு செய்யும் அந்தந்த ஒன்றிய, நகர, திமுக நிர்வாகிகள் பயணப்படி, சாப்பாடு, பணம் உள்ளிட்டவைகளை கொடுக்க வேண்டும் என்பது அக்கட்சியில் உள்ள வழக்கமாகும்.

பேச்சாளர்களின் திறமையை பொறுத்து தொகை மாறும். திறமையோடு பேசக்கூடிய நட்சத்திரப் பேச்சாளர்களாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தது ரூ.25,000 வரை கொடுக்கப்படுகிறது.

பேச்சாளர்களுக்கு மட்டுமில்லை திமுக பிரச்சார பாடகர்களுக்கும் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

நாகூர் ஹனீபாவை போலவே பாடக்கூடிய நாகூர் ஜெக்கரியா உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சார பாடகர்கள் திமுகவில் இருக்கின்றனர். இது தமிழக அரசியல் கட்சிகளில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத சிறப்பாகும்.

DMK government 2 year achievement briefing public meetings in 1,222 locations, DMK Orators excited

அந்தளவுக்கு சொற்பொழிவாளர்களும், பிரச்சார பாடகர்களும் திமுகவில் நிரம்பி வழிகின்றனர். ஆ.ராசா திமுக துணை பொதுச்செயலாளராக ஆவதற்கு முன்பு திமுக கொள்கை பரப்பு அணிச் செயலாளராக இருந்தார். அப்போது ஆண்டுக்கு ஒரு முறை சொற்பொழிவாளர்கள் கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு சூட்கேஸ் உள்ளிட்ட பரிசுப்பொருட்களை கொடுத்து ஊக்கப்படுத்துவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+