Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று ரேஷன் பை.. இன்று ஆசிரியர் தின விருது.. ஸ்டாலின் படமே இல்லாமல் அரசுக்கு தேடி வந்த "விளம்பரம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்ட விருதுகளில் ஸ்டாலினின் புகைப்படமோ அல்லது கருணாநிதியின் புகைப்படமோ இல்லாமல் இருப்பதை இன்று அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகிறார்கள். போட்டோ போட்டு விளம்பரம் தேடி கொள்வதை விட இந்த முயற்சி அரசுக்கு நற்பெயரை அளித்துள்ளது.

Recommended Video

    அதிமுக முதல்வர்களின் படமே இருக்கட்டும்... மாணவர்கள் நலனுக்காக ஸ்டாலின் எடுத்த முடிவு ...பாராட்டித் தள்ளும் பொதுமக்கள்!

    பொதுவாக பதவியேற்கும் அரசின் வெற்றி மக்கள் விமர்சிக்காதவரை மட்டுமே இருக்கும். எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது அரசியலுக்காக. ஆனால் பொதுமக்களுக்குத்தான் ஒரு அரசு யாருக்கான அரசு என்பதை சீர் தூக்கி பார்த்து அவர்களுக்கு ஆதரவு தருவர்.

    அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றது முதல் இன்று வரை பெரும்பாலும் எந்த ஒரு விமர்சனத்தையும் பொதுமக்கள் அவர் மீது வைக்கவில்லை. அந்த அளவுக்கு மக்கள் நல அரசை அவர் நடத்தி வருகிறார்.

    தலைமைச் செயலாளர்

    தலைமைச் செயலாளர்

    தலைமைச் செயலாளர் நியமனம் முதல் தனிச் செயலாளர்கள் வரை, பொருளாதார ஆலோசனை குழு முதல் பொருளாதார வளர்ச்சி கவுன்சில் வரை அனைத்திலும் திமுக அரசுக்கு மக்கள் நன்மதிப்பையே அளித்துள்ளார்கள். மகளிர், மாற்றுத்திறனாளிகள, திருநங்கையர்கள் ஆகியோருக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்துள்ளார்.

    கல்லூரி மாணவர்கள்

    கல்லூரி மாணவர்கள்


    அது போல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து கட்டணத்தால் கணிசமான தொகை தங்கள் குடும்பத்திற்கு மிச்சப்படுத்துவதாக நடுத்தர மக்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் கொரோனா காலத்தில் இரு தவணைகளாக தலா ரூ 2000 வழங்கியது. 14 மளிகை பொருட்கள் கொண்ட ஒரு தொகுப்பு- இவை எல்லாமே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

    பதவி வகிக்கும் ஸ்டாலின்

    பதவி வகிக்கும் ஸ்டாலின்


    அதிலும் கடந்த மாதம் பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த 10 ஆண்டுகள் கழித்து ஒரு கேள்விக்கு முதல்முறையாக முதல்வர் பதவி வகிக்கும் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அது போல் பள்ளி மாணவர்களுக்கான புத்தக பைகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரே இருக்கட்டும். அதை நீக்க ரூ 30 கோடி தேவையற்ற செலவு என முதல்வர் கூறியது அனைவருக்கும் பிரமிப்பாக இருக்கிறது.

    மக்கள் பாராட்டு

    மக்கள் பாராட்டு

    இதைத்தானே எதிர்பார்த்தோம் எனும் அளவுக்கு மக்கள் பாராட்டுகிறார்கள். அத்துடன் தமிழக சட்டசபையில் முதல்வரை சொந்த கட்சி எம்எல்ஏக்கள் பாராட்டி துதி பாடும் வழக்கத்தை ஸ்டாலின் புரட்சிகரமாக மாற்றியுள்ளார். இனி தன்னை அவையில் எந்த திமுக எம்எல்ஏவாவது புகழ்ந்தால் நடவடிக்கைதான் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    இதிலிருந்து தேவையற்ற விளம்பரம் தேடி கொள்வதை அவர் விரும்பவில்லை என நன்றாக தெரிகிறது.

    மக்கள் மனங்கள்

    மக்கள் மனங்கள்

    தற்போது ஸ்டாலினை மேலும் மக்கள் மனங்களில் கொண்டு சென்ற ஒரு விஷயம் ஆசிரியர் தினத்தன்று கொடுக்கப்பட்ட விருதுகள்தான். இந்த முறை அதாவது நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதில் முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் புகைப்படம் மட்டுமே இருந்ததே தவிர ஸ்டாலினின் புகைப்படமோ கருணாநிதியின் புகைப்படமோ அதில் இல்லை.

    வரவேற்பு

    வரவேற்பு

    இந்த செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வரவேற்கிறார்கள். உதாரணமாக ஜெயலலிதா ஆட்சியின் போது 2010 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதில் இடது பக்கம் ஜெயலலிதாவின் படமும் வலது பக்கம் ராதாகிருஷ்ணனின் புகைப்படமும் இருந்தது. அது போல் 2019ஆம் ஆண்டுக்கான விருதில் இடதுப்புறம் ஜெயலலிதாவின் படமும் வலது புறம் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் படமும் இருந்தது.

    துணி பை

    துணி பை

    இது போன்ற விளம்பரங்களை மக்கள் விரும்பவில்லை. அதே போல் தமிழக அரசு கொடுத்த 14 மளிகை பொருட்கள் தொகுப்பு பையில் கூட தமிழக அரசின் சின்னமான கோபுரம் சின்னம் மட்டுமே இருந்ததே ஒழிய முதல்வரின் படமோ கருணாநிதியின் படமோ இல்லை. ஆனால் இதற்கு முந்தைய ஆட்சியில் அந்த துணி பைகளில் இவையெல்லாம் இடம்பெற்றுதான் இருந்தன.

    ஸ்டாலினின் செயல்பாடுகள்

    ஸ்டாலினின் செயல்பாடுகள்

    இது போல் புகைப்படம் இல்லாத ரேஷன் பை, புத்தக பை, ஆசிரியருக்கான விருது ஆகியவற்றால் ஸ்டாலினை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில் மேற்கண்டவற்றில் அவரது புகைப்படம் போட்டிருந்தால் கூட அவருக்கு இத்தகைய "விளம்பரம்" கிடைத்திருக்காது என்று சொல்லும் அளவுக்கு ஸ்டாலினின் செயல்பாடுகள் உள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+