சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடலூர், நாகையில் திமுகவிற்கு செம்ம டப் கொடுக்கும் அதிமுக.. தொகுதி வாரியாக மாலை முரசு கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணிக்கே அதிக ஆதரவு உள்ளதாக மாலைமுரசு கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. எனினும் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சில தொகுகளில் அதிமுக முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் திமுகவிற்கு அதிமுக கடும் போட்டி அளிக்கும் என கூறுகிறது.

மாலைமுரசு தொலைக்காட்சியின் கணிப்பு விவரங்களை பார்ப்போம். நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தொகுதியில் திமுக, அதிமுக இரண்டுமே சமபலம் உள்ளதாக மாலைமுரசு தனது கணிப்பில் கூறியுள்ளது அங்கு இரண்டு கட்சிகளுமே 42 சதவீதம் வாக்குகள் வாங்கும் என்று கூறியுள்ளது.

இதேபோல் நாகை மாவட்டம் கீழவேளுர் தொகுதியில் திமுகவிற்கு 46 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும், அதிமுகவிற்கு 37சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் கணிப்பில் கூறியுள்ளது. நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணிக்கு 46 சதவீதம் ஆதரவும், திமுகவிற்கு 41 சதவீதம் ஆதரவும் உள்ளதாம்.

பங்குனி உத்திர நாளில் குல தெய்வத்தை கும்பிடுவோம் - தடைகள் நீங்கி காரிய வெற்றி கிடைக்கும்பங்குனி உத்திர நாளில் குல தெய்வத்தை கும்பிடுவோம் - தடைகள் நீங்கி காரிய வெற்றி கிடைக்கும்

கடும் போட்டி

கடும் போட்டி

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் தொகுதியில் திமுகவிற்கு 41 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 40 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 6 சதவீதமும், நாம் தமிழருக்கு 5 சதவீதமும், மநீமவிற்கு ஒரு சதவீதமு ஆதரவு உள்ளதாக மாலைமுரசு கணித்துள்ளது,

சீர்காழி

சீர்காழி

மயிலாடுதுறை தொகுதியில் திமுகவிற்கு 40 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 37 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 6 சதவீதமும், நாம் தமிழருக்கு 6 சதவீதமும் உள்ளதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. சீர்காழியில் திமுகவிற்கு 46 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 37 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 7 சதவீதமும், நாம் தமிழருக்கு 4 சதவீதமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிதம்பரம்

சிதம்பரம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திமுகவிற்கு 42 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 41 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 3 சதவீதமும், நாம் தமிழருக்கு 4 சதவீதமும் ஆதரவு உள்ளதாம். கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் திமுகவிற்கு 40 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 43 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 2 சதவீதமும், நாம் தமிழருக்கு 5 சதவீதமும், மநீமவிற்கு 2 சதவீதமும் உள்ளதாம்.

குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் அதிமுகவிற்கு 42 சதவீதம் ஆதரவும், திமுகவிற்கு 39 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 5 சதவீதமும், நாம் தமிழருக்கு 4 சதவீதமும், மநீமவிற்கு 2 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கணிப்பில் கூறப்பட்டுள்ளது., கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுகவிற்கு 46 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 38 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 1 சதவீதமும், நாம் தமிழருக்கு 5 சதவீதமும், மநீமவிற்கு 3 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பண்ருட்டி

பண்ருட்டி

கடலூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவிற்கு 45 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 41 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 2 சதவீதமும், நாம் தமிழருக்கு 2 சதவீதமும், மநீமவிற்கு 3 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பண்ருட்டி தொகுதியில் திமுகவிற்கு 45 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 43 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 2 சதவீதமும், நாம் தமிழருக்கு 4 சதவீதமும், மநீமவிற்கு 1 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திமுக ஆதரவு

திமுக ஆதரவு

நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் திமுகவிற்கு 44 சதவீதம் ஆதரவும், அதிமுகவிற்கு 40 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு 2 சதவீதமும், நாம் தமிழருக்கு 5 சதவீதமும், மநீமவிற்கு 3 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

English summary
In most constituencies in Nagapattinam, Mayiladuthurai and Cuddalore districts, the DMK has the most support. However, the AIADMK is said to be leading in some constituencies in Mayiladuthurai and Cuddalore districts. The DMK it will face stiff competition from the AIADMK in some constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X