3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்!
Recommended Video
சென்னை: தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். அந்த தொகுதிகளை அவர்கள் கைப்பற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தயாநிதிமாறன், கலைநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். அந்த தொகுதிகளை அவர்கள் கைப்பற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமுள்ள 38 தொகுதிகளில் (வேலூர் நீங்கலாக) 36 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
இதில் மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை ஆகிய 3 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர்.

மூன்று வாரிசுகள்
இதில் போட்டியிடுவோர் மூவரும் வாரிசுகளாவர். தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் போட்டியிட்டனர். இவர்கள் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, மாறனின் மகன் தயாநிதி மாறன்.

தமிழச்சி தங்கபாண்டியன்
லோக்சபா தொகுதிகளில் மிக முக்கியமான தொகுதி தென் சென்னையாகும். இங்கு அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் எம்பியாக உள்ளார். இவரை எதிர்த்து தமிழச்சி தங்கபாண்டியன் திமுக சார்பில் களமிறக்கப்பட்டார். இந்த தொகுதியில் சி.என்.அண்ணாதுரை, முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா பாலி, டிஆர் பாலு உள்ளிட்டோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும்.

தயாநிதி மாறன்
தண்ணீர் பற்றாக்குறை அதிகமுள்ள தொகுதி மத்திய சென்னையாகும். இங்கு தயாநிதி மாறனும் பாமகவின் சாம் பாலும் நேருக்கு நேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியின் எம்பியாக இருந்தவர் அதிமுகவின் எஸ்ஆர் விஜயகுமார். தயாநிதி மாறன் இந்த தொகுதியில் போட்டியிட்டு இரு முறை எம்பியாகியுள்ளார்.

கலாநிதி வீராசாமி
வடசென்னை மக்களவை தொகுதியும் தண்ணீர் பிரச்சினை நிலவும் தொகுதிகளில் ஒன்றாகும். இங்கு திமுக சார்பில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, தேமுதிக வேட்பாளர் ஆர் மோகன்ராஜும் போட்டியிட்டனர். இந்த 3 தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications